முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நிருத்யர்ப்பணம்: "நிருத்யா தாரா" நிரோஷினி ரங்கண ஹேமதாஸா

பாரத நாட்டின் சரித்திரம் ஓர் உயர்ந்த கலாசாரத்தை உலகிற்கு எடுத்துரைக்கிறது. நன்கு ஆழமாக பார்க்கையில் பல்வேறுபட்ட மொழி, பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்கம், கலைகளிலும் வேறுப்பட்டிருந்தாலும் அவர்களில் ஓர் ஒற்றுமையைப் பார்க்கலாம். அது போன்று இன்று இவ்வனைத்து அம்சங்களும் மலேசியா திருநாட்டின் கலாச்சாரத்தோடு கலந்தாலும் அதனின் தொன்மை மாறமால் இன்னும் கலைத்துறையில் பிரத்யேகமான ஓர் இடத்தைப் பிடித்துள்ளது என்பதனை இன்று நடந்தேறிய அரங்கேற்றமேயாகும். மலேசியா வாழ் சிங்கள பெண் சகோதரி நிரோஷினி ரங்கணா அரங்கேற்றிய நிருத்யர்ப்பணம் தில்லையில் ஆடும் எம்பெருமானுக்கு ஓர் அற்புத அலங்காரமாகும். அவளின் நடன முறையும் தெளிவும் நளினமும் முன்னேற்றமுமடைந்த ஒரு கலை என அரங்கமே மெய் மறக்க வைத்தவள், நிரோஷினி ரங்கணா. குறிப்பாக கூறவேண்டுமென்றால் அவளின் நடனத்திற்கேற்ற அமைக்கப் பெற்ற இசை உருப்படிகளும் அபிநயமும், நிருத்தத்திலும் தாளத்திலும் உள்ள கலை நுணுக்கங்களும் சேர்க்கையினால் இவளீன் நடனம் ஒரு தனித்தன்மை வாய்ந்த கலையாக பரிமளிக்கிறது.  சிங்களத்தில் நிரோஷினி ரங்கணா என்றால் அமைதியான நடனக் கலைஞராகும். அவளின் தாய் ஶ்ரீ

லாஸ்யா கலாலயம்-நிருத்யர்ப்பணம்

சகோதரி நிரோஷினி ரங்கனா அவர்தம் நாட்டியக் குரு ஶ்ரீமதி குருவாயூர் உஷா துரையும் குரு அப்துல்லா அப்துல் அமீட் நம்மினத்தவரின் கலாச்சாரத்தில் சூடாமணியாக ஒளி வீசுவது நாட்டியக்கலையாகும். இக்கலையானது காலத்தால் முதுமை பெற்று, என்றும் இளமை குன்றாத சிறப்புத்தன்மை வாய்ந்தது என்றால் மிகையாகாது. 2000 ஆண்டுகளாக உலகமெங்கும் பரவிக் கிடக்கும் இப்பழமை வாய்ந்த கலைக்கு இலக்கணம் வகுத்தவர் பரத முனிராவார். அவர் எழுதியருளிய "நாட்டிய சாஸ்திரம்" என்ற சமஸ்கிருத நூலில் எடுக்கப்பட்டவைதான் நாட்டியக் கோட்பாடு. நாட்டியம் என்பதற்கு 'நட்' என்பதே சமஸ்கிருத மூலச் சொல்லாகும். 'நட்' என்றால் சிலர் நடனம் என்றும் நாடகம் என்றும் பொருள் கொள்கின்றனர். இந்த மூலச் சொல், இந்த இரண்டு கலைகளையும் குறிக்கும். ஏனென்றால் பண்டைய பாரதத்தின் நாடகம், நடனத்தை ஒரு அங்கமாகக் கொண்டிருந்தது. கதையையும் கருத்துகளையும் பாத்திரங்களின் குணச்சித்திரங்களையும் கதையில் வரும் சூழ்நிலைகளையிலும் இரசிகர்கள் மகிழ வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமாயின் கருத்துகளும் உணர்ச்சிகளும் சரியான முறையில