முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிறுகதை 2: கோபம் தணியவில்லையா???

2004 ஆண்டு நடந்த ஆழி பேரலையின் BBC செய்தியை பார்த்தப்பின் என் மனதை உருத்தியக் காட்சியினைக் கதையாக்கம் செய்து நான் பேரவைக் கதைக்கு எழுதியச் சிறுகதையாகும். கருத்துகள் இருப்பின் கதையின் இறுதியில் தட்டச்சுச் செய்யவும். நன்றி “அம்மா.... அம்மா ... இந்த அவலையின் நிலைமையைப் பார்த்தாயாமா. என்னை வளர்த்த தாயே, என்னை பெற்றெடுத்த தாயைக் கூட நான் பார்த்ததில்லை”. “உன்னையே பார்த்து பார்த்து வளர்ந்தேன்.... உன்னையே நம்பி வாழ்ந்தேன்; வாழ்றேன். அடுத்த வார உன் பேத்திக்கு அதான் நம்ம பொன்னுதாயிக்கு கல்யாணம்”. கம்பீரமா சொன்ன சொக்கலிங்கம் கடலையே வெறித்து பார்க்கிறான். “தாயே உன்கிட்ட சொல்லமா நான் யாருக்கிட்டம்மா போய் பொலம்புவேன். ஒன்னதான் தாயீ நான் நம்பிக்கிட்டு இருக்கேன்”. “மாமா... மாமா... இந்த மனுசன் எங்கதான் போய் தொலைந்தாருன்னே தெரியலையே?” “இந்த மனுசனுக்குப் பைத்தியம் ஏதோ புடிச்சிருச்சா இந்த நேரத்துல கடலை பார்த்து ஒக்காத்திருக்காரு”. மறுபடியும் குருவம்மா “யோ... மனுசா அங்க அப்படி என்னத்தேயா பார்த்துக்கிட்டு இருக்க, வாயா என் கையாலே ஒனக்கு பிடிக்கும்னே வஞ்சனை மீன் கறிக் குழம்பு வைச்சிருக்கேன் வந்து ஒரு கை

சிறுகதை 1: நிஜங்கள்

சில ஆண்டுகள் முன்பு என் மனதை உருத்திக்கொண்டிருந்த ஒரு உண்மை கதையினையொட்டி நான் பேரவைக் கதைக்கு எழுதியச் சிறுகதையாகும். கருத்துகள் இருப்பின் கதையின் இறுதியில் தட்டச்சுச் செய்யவும். நன்றி  “அர்வின்... அர்வின்....” அம்மா அழைக்கும் குரல். மௌனமாக ஏதோ ஒன்று சிந்தித்தவாறு கண்ணயட்கிறான் அர்வின். “டேய் மச்சா... இன்னிக்கு நாம் சந்திக்கிற கடைசிநாள். டேய் என்னடா பார்க்கற?  இன்னையோடு நம்ம கல்லூரி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி டா..அப்பாடா இனி உன் தொல்லை எனக்கு இல்லை!!! “ம்ம்ம்ம்...... நாலு வருசம்டா... எவ்வளவு சீக்கிரம் முடிஞ்சிருச்சுப் பாரு. எப்படியோ படிப்பை    முடிச்சிட்டோம். இனிமேல வேலையைத் தேடனும்.” என்றான் மதன். அர்வின் மதன் கூறும் எந்த விசயமும் காதில் விழாதவாறு மதனின் செய்கையையும் அவனின் புன்னகையும் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தான். அவனின் மனம் ஏதோ வருடுகிறது. “டேய் அர்வின் நீ எப்படா ஈப்போவுக்கு போறே”...... அப்பொழுது கூட அர்வின் வாயைத் திறக்காமல் அமைதியின் சொரூபமாக நின்று கொண்டிருந்தான். அவன் மனதில் ஏதோ ஒரு தேடல். என்றுமே இல்லாத தவிப்பு. கல்லூரி வாழ்க்கை விட்டு அவரவர் ஊருக்குப் பிரிந்து

தமிழ் இலக்கிய நூல்கள்

நண்பர்களே, குறிஞ்சித்திணை வெறும் தனிநபர் படைப்புகள் தாங்கி வராமல் மேலும் பிற தமிழ் இலக்கியநூல்களை பதிவேற்றம் செய்துள்ளேன். உங்களுக்கு வேண்டியதை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்து புத்தகங்களும் முற்றிலும் இலவசம். விரும்புவோர் கீழ்காணும் முகவரியைச் சொடுக்கவும். இங்கே சொடுக்கவும்  http://kurinji-thinai.blogspot.com/p/blog-page_13.html  அல்லது பதிவிறக்கம் எனும் சொல்லை சொடுக்கவும். நன்றி இங்ஙன், தனேஷ்@இளந்தமிழ்

இலக்கியப் பயணம்-2

முதலாம் பருவம் முடிவடைந்து , இரண்டாம் பருவமும் முடிவடைந்து விடுமுறைக்காக சொந்த ஊரான தெலுக் இந்தான் செல்லாமல் கோலாலம்பூருக்குச் சென்றேன் . என்னுடைய அத்துணை நாளும் மலாயா பல்கலைகழத்திலேயே காலை முதல் மாலை வரம் செலவழித்தேன் . கண்டதை கற்றவன் பண்டிதனாவான் என்பார்களே அது போல நிறைய புத்தகங்களை வாசிக்கத் துவங்கினேன் .  Dr V Sabapathy  (Malaysia) Associate Professor, Department of Indian Studies University of Malaysia அப்போதுதான் இந்தியப் பிரிவுத் தலைவர் ஐயா சபாபதி அவர்களைச் சந்திக்க வாய்ப்பு கிட்டியது . அவருடன் சிலப்பதிகாரம் பற்றிய என்னுடைய சந்தேகங்களைக் கேட்டறிந்து கொண்டேன் . அவரும் முகம் சுளிக்காமல் நான் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் மிகத் தெளிவாக பதிலளித்தார் . அவருடைய அறைக்கு நுழையும் போதே தமிழ் மணத்தோடு தெய்வீக வாசனையும் வீசிற்று . எனக்கு அந்த இடத்தை விட்டு வெளியேற மனமில்லாமல் வெளியேறினேன் . அவரும் என் கைகளில் சில பேரவைக் கதை புத்தகத்தை என்னிடம் கொடுத்து " நிறையா வாசியுங்கள் , நீங்களும் ஒரு நாள் எழு

இலக்கியப் பயணம்-1

மீண்டும் என்னை எழுதத் தூண்டியப் புத்தகம். அண்ணன் ம.நவீன் எழுத்துகளில் மூழ்கும் போது, எனக்குள் இருக்கும் இந்த எழுத்துத் திறமையை முதல் முதலில் எனக்கே சுட்டிக்காட்டி என்னை ஒரு சிறுகதைப்போட்டியில் எழுத வைத்த அண்ணன் பாலமுருகன் அவ்ர்கள் என் நினைவில் வருகிறார். நன்கு  நினைவில் பதிந்த ஒரு காட்சி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் அண்ணன் பாலமுருகன் நன்கு பரிட்சயமானதால் அவ்வப்போது என் அறைக்கு வருவார், இலக்கியக் கருத்துகளைப் பேசுவார், அதே நேரத்தில் அவர் எழுதிய சிறுகதைகளை வாசிப்பதற்காக என்னிடம் வழங்கியுள்ளார். என்னிடம் அவர் ஏன் இதனை எல்லாம் கொடுக்கிறார் என்பதனை என் சிற்றறிவுக்கு எட்டவில்லை அந்த நேரத்தில். ஆனால், என்னிடம் மொழி மட்டுமில்லை சமயச் சார்ந்த விசயங்களையும் கலந்துரையாடுவார். அவ்வப்போது "தனேஷ், நீங்களும் எழுதலாமே, முயற்சித்துப் பாருங்களேன்" என்பார். மனதிற்குள்ளே நான் முணுமுணுத்துக் கொண்டு, இவருக்கு வேலையே இல்லையா என்ற நினைப்பு வந்ததுண்டு. இருப்பினும், அவரிடம் "பிறகு பார்ப்போம்" என்பேன்".  அவர் அவ்வப்போது என்னை தூண்டியதில் என மனதில் ஒரு உண்மைச் சம்பவம் உருவெடுத்து

நட்பியல்

காலம்   என்   எதிராளி அதை   ஒருபோது   நம்பவில்லை . காலத்தின்   பதில்   காலனுடையது உன்னுடைய   பதில்   நம்முடையது . நம்பிக்கை   மறு   உருவமே   நட்பு ஏன்   இந்த   தடுமாற்றம் நான்   எந்த   ஒரு   தவற்றையும்   செய்ய   தூண்டுவிக்கவில்லையே ஏன் அன்பைக்   கண்டு   பயப்படுகிறீர்கள் .... கண்டதே   கோலம் ,  என்ற   எண்ணாமல் , வாழ்வை   புரிந்து   கொள்ளவே இந்த   அவலங்கள்   நம்   வாழ்க்கையில் ... நான்   அனுபவித்துள்ளேன் . என்   வாழ்க்கையில்   நிறையவே   இருப்பினும் உன் நட்பு   பிடித்திருக்கு .. பயமே   மனிதனின்   உயிர்கொள்ளி உன்   மேல்   நம்பிக்கை   வை ... புறத்தைப்   பார்க்காமல்   அகத்தை   மட்டும்   பார்க்கும் எவருக்கும்   பயம்   என்ற   உயிர்கொள்ளி   அண்டாது ... வாழ்வியலைப்   புரிந்து   கொள் ... உன்   வாழ்வு   உன்   கையில்.

தினகரன்

இளந்தென்றல் வீசியது உன் காலடியால் உதிர்கிறன பூக்கள் அலை மோதுகிறது  ஓயாத அலைகள் இன்று உன் காலடிக்காக  நித்தம் துடிக்கிறது என் இதயத் துடிப்பு. !

அன்புக் கரங்கள்

ம.நவீன் அவர்களின் எழுத்தாக்கம் "கடக்க முடியாத காலம்". மலேசிய நாட்டு இளம் எழுத்தாளரான அண்ணன் ம.நவீன்( Navin Manogaram ) எழுத்தை நுகர்ந்தேன். "கடக்க முடியாத காலம்". ஒவ்வொரு இளம் எழுத்தாளரும் வாசிக்க வேண்டிய நூல். குறிப்பாக என்னை போன்ற வளரும் எழுத்தாளர்கள் வாசிக்க வேண்டிய ஒரு நூல், சில சந்தர்ப்ப சூ ழ்நிலையினால் இன்று நான் சிறுகதை, கவிதை, கட்டுரை எழுதுவதிலிருந்து விடுப்பட்டிருந்தேன். என்னால் இயன்ற சில மன உணர்வுகளை கதை வடிவாகவும், கவிதை வடிவாகவும் கிறுக்கீனேன். அவை வெறும் கிறுக்கலாகவே என் பெட்டியில் தூங்குகிறது. அவ்வப்போது மனம் சோர்வடையும் போது எடுத்து வாசித்துக் கொள்வேன். பல இடங்களில் பிரசுரிக்க அனுப்பியுள்ளேன், எதிலும் பிரசுரித்ததில்லை; காரணமும் தெரியவில்லை. ஏதேனும் குறைகள் இருப்பின் சுட்டிக்காட்டிருந்தால் திருத்தியிருப்பேனே. வாய்ப்பளிக்கவில்லை.... என் சிந்தனையை இலக்கியத்தில் விட்டு வெளியேற்றினேன். MA.இளஞ்செல்வன் போன்ற நல்லுள்ளங்கள் வழிக்காட்டிருந்தால் நானும் இன்று நல்லதொரு இலக்கியவாதியாகவும், எழுத்தாளனாகவும் வளர்ந்திருப்பேன். இலக்கியம் என் வேலை இல்லை எனக் கருதியே ந

குரலற்றவர்களின் குரலோவியம்

எழுத்து உலகத்தில் என் போன்ற வளரும் எழுத்தாளர்களை வளர்க்க எவரும் முன் வருவதில்லை என்பது எனது அனுபவப்பூர்வமான கருத்தாகும். அண்ணன் பாலமுருகன் அவர்களால் தூண்டப்பட்டும் இன்று எழுத்துலகத்தில் காலடி வைத்துள்ளேன். சமீப காலமாக எனக்கும் இவ்வுலகத்திற்கும் சிறு இடைவெளியை வைத்து நான் ஒதுங்கியிருந்தேன்.  ஒவ்வொரு காலக்கட்டத்திலும் என் போன்றவர்கள் தங்களின் கிறுக்கல்களை மக்களிடம் சேர்க்கச் சிரமம் கொள்கின்றனர். அதனை கருத்தில் கொண்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சியை உங்கள் கைகளில் தவழவிடுகிறேன்.  திருத்திக்கொள்கிறேன், பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டும் போது. நன்றி இப்படிக்கு, தனேஷ்