தமிழ் மலர் நாளிதழில் வெளியேறிய செய்திச் சுருள்.. தமிழ் மலர் நாளிதழில் பிரசுரமான செய்தி ஒன்றுயொட்டி முகநூல் நண்பரும் சாகோதரியுமான செல்வி உதயகுமாரின் கருத்து என்னவென்றால் "என் கருத்து என்னவென்றால் மலாய்க்காரர்களைக் குறை சொல்வதை விடுத்து முதலில் நம் ஆட்களைக் கேள்வி கேட்கவேண்டும்... தமிழ்ப்பள்ளிகளோடு தொடர்புடைய பல முக்கிய போட்டிகளே தீபாவளி,விநாயகர் சதுர்த்தி போன்ற நமக்கு முக்கியமான தினங்களில்தான் நடத்தப்படுகின்றன..இன்னும் பல விசயங்கள் உண்டு..ஏன் தீபாவளி நெருங்கும் இந்த வாரத்தில் கூட மதிய வேளைகளில் நிகழ்வுகள் உண்டு..தீபாவளி வாரத்திலேயே பள்ளிகளில் பரிசளிப்பு உள்ளிட்ட சில முக்கிய நிகழ்வுகள் உண்டு. இதையெல்லாம் மலாய்க்காரர்கள் ஏற்பாடு செய்யவில்லை. நம்மவர்கள்தான்.நோன்புப் பெருநாள்,சீனப்புத்தாண்டுக்கு ஒருவாரம் விடுப்பு எடுக்கலாம் என அரசாங்கம் சொன்னாலும் தமிழ்ப்பள்ளிகள் ஒருநாள் விடுமுறையோடு பள்ளியைத் தொடக்கிவிடும்.பிறகு மற்ற இனத்தவர்கள் விடுமுறையை ஈடுகட்டும் தினத்தில் நம் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படும்.நாம் இவ்வாறு செய்வதால் பிற இனத்தவர்கள் என்ன செய...