முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

திருவேந்தன் பதிவு #1 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திருவேந்தன் பதிவு #1 : தமிழ் வளர்ச்சிப் போக்கில் தவறான செயற்பாடுகள்.

உலக மொழிகள் அனைத்துமே எவ்விதத்திலும் தாழ்ந்தது உயர்ந்தது என இல்லை என்பதே மொழியியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். எந்த மொழிகளில் உலகச் செய்திகள் தன் சமுதாயத்தினரிடம் கொண்டு செல்ல வல்லமை கொண்டுள்ளதோ அதுவே அவர்கள் பேசும் உயர்ந்த மொழியாகும். மொழியியல் கோட்பாட்டின் அடிப்படையில் ஒவ்வொரு மொழியில் அமைந்துள்ள அட்டவணைக்குமேல் அந்த மொழிக்கு எழுத்துகள் தேவைபடுவதில்லை. ஒவ்வொரு மொழியும் தனக்கு தேவையான எழுத்து அட்டவணையினைப் பெற்றுள்ளது. அதற்கேற்றார்போல் ஆங்கிலமும் 26 எழுத்துகளுக்குமேல் ஓரெழுத்தைக்கூட தன் அட்டவணையில் சேர்க்கவோ நீக்கவோ அனுமதிப்பதில்லை என்றால் மிகையாகாது. மேலும், தேவநகரி எழுத்தில் எ. ஒ என்ற எழுத்து இல்லையென அந்த எழுத்தமைப்பை பயன்படுத்தும் மொழியினர் கவலைபட்டதில்லை.  காலத்திற்கேற்றார்போல் எல்லா மொழிகளும் பிரமொழியில் உள்ளப் பெயர்ச்சொற்களைத் தங்கள் மொழிகேற்ற ஒலிப்பு முறையில் அமைத்துக் கொள்கின்றன.  உதாரணம் :  பழனி > என்ற பெயரில் பதிவு செய்வதில் ‘ழ’ ஆங்கிலத்தில் இல்லை என ஆங்கிலேயர்கள் கவலைபட்டதில்லை.  இவ்வாறு தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அனைத்து மொழிகளும் தங்களுக்கேற்றார் ப...