எட்டாக்கனி என்று ஏளனம் செய்தவர்களே... இதோ பாருங்கள், இன்று தமிழோடு வந்திருக்கிறது ஐபோன்! ஆப்பிள் நிறுவனம் இன்று தனது புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்தியுள்ளது; அவற்றுடன் நமது தாய்மொழியான தமிழும் தொழில்நுட்பத்தில் அரியணை ஏறியுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'ஐ.ஓ.எஸ் 7' (iOS 7) இயக்க முறைமையில் (Operating System) தமிழ் மொழி அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றுள்ளது. இதுவரை ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் சாதனங்களில், 'செல்லினம்' போன்ற செயலிகளைத் (Apps) தரவிறக்கம் செய்து, நிறுவிய பிறகே தமிழைப் பயன்படுத்த வேண்டிய நிலை இருந்தது. ஆனால் வரலாற்றில் முதல்முறையாக, ஒரு கைபேசிக்கான அடிப்படை இயக்க முறைமையிலேயே தமிழ் எழுத்துருவும், தமிழ் உள்ளீடு செய்வதற்கான விசைப்பலகையும் (Keyboard) இயல்பாகவே ஒருங்கிணைத்து வழங்கப்பட்டுள்ளன. வரும் செப்டம்பர் 18-ஆம் தேதி முதல், ஐபோன் 4, ஐபேட் மற்றும் ஐபேட் மினி பயனர்கள் இந்த புதிய இயக்க முறைமையைத் தரவிறக்கம் செய்து, நேரடியாகத் தமிழைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையின் பின்னணியில் இருப்பவர் திரு. முத்து நெடுமாறன் அவர்கள். ஆப்பிள் நி...