தெலுக் இந்தான் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர்கள் அறை. ஏர்-கண்டிஷனர் 18 டிகிரியில் முனகிக் கொண்டிருந்தது. ஆனால் அறைக்குள் நிலவிய வெப்பம் எந்தத் தெர்மோமீட்டரிலும் அடங்காது. "இத்தோட நிறுத்திக்கோங்க சந்தோஷ்! ஜஸ்ட் கட் இட். இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினா, ரிசல்ட் வேற மாதிரி இருக்கும். உங்க சர்வீஸ் ரெக்கார்டுல அது வெறும் கரும்புள்ளியா இருக்காது, ஒரு பெரிய ஓட்டையாவே ஆகிடும்!" மலர்விழியின் குரலில் 'டெசிபல்' அதிகமில்லை, ஆனால் அதில் ஒரு 'ஷார்ப்னஸ்' இருந்தது. 45 வயது. நேர்த்தியான சுரிதார். தலையில் ஒரு மல்லிகைச் சரம். ஒரு முதிர்ந்த ஆசிரியருக்கே உரிய அமைதி. ஆனால் இன்று, அவர் கண்கள் கோபத்தில் சிவந்திருந்தது BP-யினால் அல்ல; ஆணாதிக்க ஆணவத்தின் முன்னால் அணை உடைந்ததால். விளையாட்டு ஆசிரியர் சந்தோஷ் தன் நாற்காலியில் 'ரிலாக்ஸ்டாக' சாய்ந்தான். ஒரு நக்கலான புன்னகையை உதிர்த்தான். "ஏன் மேடம் இவ்வளவு டென்ஷன்? நீங்க பண்ணின 'லைவ் ஸ்ட்ரீமிங்' தெலுக் இந்தான் முழுக்க வைஃபை மாதிரி பரவியாச்சு. உண்மை எப்பவும் கசக்கும், இல்லையா?" அவனுக்குப் பின்னால் 'திரிமூர்த்திகள்...