முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆசிரியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தூசி தட்டிய எழுத்துகளும்... தொடரும் எழுத்துப் பயணமும்!

நீண்ட நாட்களாக என் சிந்தனையின் ஆழத்தில் உறங்கிக் கிடந்த எழுத்துகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்து, தூசிப் படிந்தப் பக்கங்களைத் தட்டிச் சுத்தம் செய்து, என் வலைப்பதிவில் பதிவேற்றத் தொடங்கியிருக்கிறேன் . இந்த மறக்க முடியாத மீள்வருகைக்குப் பின்னால், என் சோம்பலை முறித்து, எழுத்தார்வத்திற்கு மீண்டும் தூண்டுகோலாக அமைந்த நல் இதயங்களை இந்தத் தருணத்தில் நினைவுகூர்ந்து நன்றி கூறுவது என் கடமை . முதலாவதாக, புத்தகத் தொடர்பான கலந்துரையாடல்களைத் தொடங்கி, என் சிந்தனைக்கு வடிவம் கொடுத்து மீண்டும் என்னை எழுத ஊக்கப்படுத்திய மண்ணின் மைந்தன், என் அருமை நண்பன் தயாஜி அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள் . நாவல் போட்டியில் என்னைச் பங்கேற்கச் செய்து, என் கற்பனைச் சிறகுகளுக்கு வீச்சு கொடுத்த தீப்பொறியின் மகளுமாகிய சகோதரி பொன் கோகிலம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் . "இனி எழுதவே வேண்டாம்" என்று நான் ஒதுங்கி நிற்க நினைத்த ஏமாற்றத்தின் தருணங்களில், அவ்வப்போது தன் அன்பான வார்த்தைகளால் எனக்கு ஊக்கமளித்து, என்னை மீண்டும் எழுதத் தூண்டிய முனைவர் இராஜேஷ் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் . ஆயிரங்கள் ...