தமிழ் மலர் நாளிதழில் வெளியேறிய செய்திச் சுருள்.. |
தமிழ் மலர் நாளிதழில் பிரசுரமான செய்தி ஒன்றுயொட்டி முகநூல் நண்பரும் சாகோதரியுமான செல்வி உதயகுமாரின் கருத்து என்னவென்றால் "என் கருத்து என்னவென்றால் மலாய்க்காரர்களைக் குறை சொல்வதை விடுத்து முதலில் நம் ஆட்களைக் கேள்வி கேட்கவேண்டும்... தமிழ்ப்பள்ளிகளோடு தொடர்புடைய பல முக்கிய போட்டிகளே தீபாவளி,விநாயகர் சதுர்த்தி போன்ற நமக்கு முக்கியமான தினங்களில்தான் நடத்தப்படுகின்றன..இன்னும் பல விசயங்கள் உண்டு..ஏன் தீபாவளி நெருங்கும் இந்த வாரத்தில் கூட மதிய வேளைகளில் நிகழ்வுகள் உண்டு..தீபாவளி வாரத்திலேயே பள்ளிகளில் பரிசளிப்பு உள்ளிட்ட சில முக்கிய நிகழ்வுகள் உண்டு.
இதையெல்லாம் மலாய்க்காரர்கள் ஏற்பாடு செய்யவில்லை. நம்மவர்கள்தான்.நோன்புப் பெருநாள்,சீனப்புத்தாண்டுக்கு ஒருவாரம் விடுப்பு எடுக்கலாம் என அரசாங்கம் சொன்னாலும் தமிழ்ப்பள்ளிகள் ஒருநாள் விடுமுறையோடு பள்ளியைத் தொடக்கிவிடும்.பிறகு மற்ற இனத்தவர்கள் விடுமுறையை ஈடுகட்டும் தினத்தில் நம் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படும்.நாம் இவ்வாறு செய்வதால் பிற இனத்தவர்கள் என்ன செய்வார்கள்?அட இந்தியர்கள் அவர்கள் பெருநாளை எல்லாம் விட்டுவிட்டு வேலை செய்வார்கள்.அவர்களுக்கு ஒருநாள் விடுப்பு மட்டும் போதும்.நாமும் அந்த மாதிரி நாளில் சில நிகழ்வுகளை நடத்தலாம் என்றுதான் நினைப்பார்கள்.கடமை உணர்வு அதிகம் இருக்கலாம் தப்பில்லை.ஆனால் எல்லாவற்றுக்கும் ஓர் அளவு உண்டு.இந்த மாதிரி சமயங்களில் பிள்ளைகளும் பள்ளிக்கு வருவதை விரும்பாமல் மட்டம் போடுவார்கள்.ஓரிரு பிள்ளைகளுக்கு பள்ளி நடத்தினால் போதுமா? இதையெல்லாம் கேட்டால் வாய் அதிகம் என்பார்கள்.பள்ளியை எதிர்க்கிறோம் என்பார்கள்.
இந்த மாதிரி இருப்பதால்தான் மற்ற இனத்தவர்களும் நம் முக்கிய பண்டிகைகளில் கைவைக்கிறார்கள்.இப்போது சொல்லுங்கள் அவர்கள் அப்படி செய்ய நாம்தானே காரணம்?நாம் கோடு போடுகிறோம்.அவர்கள் ரோடு போடுகிறார்கள்.தீபாவளி எப்போது வரும் என முன்கூட்டியே தெரியும்.ஏன் எந்தத் தரப்பும் முயற்சி எடுத்து தீபாவளிக்கு முன்னமே சனிக்கிழமைகளில் பள்ளி வைத்து ஈடுகட்டிவிட்டு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஒருவாரம் விடுப்பு கொடுக்கவில்லை?பிள்ளைகளுக்குதான ே பண்டிகை கொண்டாட்டம்?வெளியூருக்குச் செல்லும் ஆசிரியர்களும் இருப்பார்களே?அதேமாதிரி முன்கூட்டியே நாள்காட்டியில் திகதிகளைச் சரிபார்த்து தீபாவளி மாதத்தில் எந்தப் பள்ளி நிகழ்வுகளும் இருக்காமல் பார்த்து அட்டவணை போடலாமே?மலாய்க்காரர்கள் நோன்பு மாதத்தில் எல்லாவற்றையும் ரத்து செய்கிறார்கள்தானே?நாமும் சில விசயங்களை சீர்தூக்கிப் பார்க்கலாமே?
என் கருத்து தனிப்பட்ட கருத்துதான்..சரியாகதான் இருக்கவேண்டும் என்றில்லை..உங்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் அதையும் மதிப்பேன்..முதலில் நாம் நமது அடையாளங்களை இழக்காமல் இருப்போம்.முதலில் நாம் நம் உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் இருக்கலாம்.பிறகு மற்றவர்கள் என்ன செய்ய முடியும்? இது குறித்து விரைவில் ஒரு முழுமையான கட்டுரை வரைவேன்."
சகோதரர்களே, நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்???
கருத்து பகிர்வு,
தனேஷ் பாலகிருஷ்ணன்
மின்கல்வி நிபுணர்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக