அகத்திணைக்கல்வி என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் வழங்க வேண்டிய இன்றியமையாக் கல்வியாகும். தலைமக்கள் இருவர் தாமே எதிர்கொண்டு,காதல் கொண்டு பெறும் இன்பம், பிறருக்கு இன்னதென்று உணர்த்த முடியாததும் தாமே உணர்ந்து கொள்ளக்கூடியதும் அகமாகும். சங்க காலங்களில் நம் முன்னோர்கள் இல்லறவு வாழ்வு பூசலின்றி வாழ்ந்தனர் என்பதனை நம் அகத்திணைப் பாடல்களில் அறியலாம்.
அகத்திணை,புறத்திணைஎன பல ஒற்றுமை வேற்றுமைகள் கொண்டிருந்தாலும் புறத்திணையைக் காட்டிலும் அகத்திணை சிறபம்சங்கள் கொண்டதாக கருதப்படுவதாகநன்கு தெளிவாக விளங்குகிறது. புறத்திணைப் பாடல் அமைப்புகள் வீரம் மக்களுள் சிலருக்கே உரியதாகப் புலப்படுகிறது.
“நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே”- [புறம்.312]
அகத்திணைப் பாடல் பொருள் காமமோ காதலோ ஆண் பெண் என்ற பிரிவினைக் கொண்டே அஃறிணை உயர்திணை உயிர்க்கெல்லாம்பொதுவாக அமைக்கப்பெற்றுள்ளது என்பதனை கீழ்காணும் பாடலில் தொல்காப்பியரே கூறுவது போன்று உடம்பொடு ஒட்டிய இயற்கையதாகும்.
“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும் (தொல்.1168)”
இயற்பெயர் சுட்டாமை
அகத்திணையில் வரும் தலைமகனாகக் குறிக்கப்படுவனை அவர்களின்பெயர்கள் சுட்டுவதில்லை. உதாரணம், நாடன், ஊரன், சேர்ப்பன் என்றப் பொதுப்பெயரால் சுட்டுவதே வழக்காகும். தனி நபரின் இயற்பெயரைச் சுட்டுவது அகத்திணையின் மரபல்ல. அவ்வாறாகச் சுட்டப்பட்டால் அது அகத்திணையன்றி வாழ்க்கை வரலாறாக மாறிவிடும். அதுமட்டுமின்றி அந்நிகழ்வில் பெயரைக் குறிப்பிட்டால் சமுதாயத்தில் சிக்கல்கள் தோன்றக்கூடும். அகப்பொருள் இலக்கியம் குடும்ப இலக்கியமாகும்.
வெளிப்பாடு உத்திகள்
கவிஞன் தன் ஆளுமையால் பொருள் புலப்பாட்டிற்காகப் பல உத்திகளைக் கையாளுகிறான். அவற்றை இலக்கிய உத்திகள் என குறிப்ப்டுகின்றோம். தொல்காப்பியர் அகப் பொருளுக்குரிய உத்திகளாகக் குறிப்பு பொருண்மையில் அமைந்த உள்ளூறை, இறைச்சி என இரண்டினைச் சுட்டுகின்றார்.
திணை
தொல்காப்பியம், கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, மருதம்,நெய்தல், பாலை,பெருந்திணை என ஏழு திணைகளைக் குறிக்கப்படுகிறன. அகப்பாடல்கள் முதல், கரு, உரி என்னும் மூன்று பொருண்மைகளை உடையன. முதற்பொருள் நிலம், பொழுது என்ற இரு பிரிவுகளை உடையது. கருப்பொருளில் தெய்வம், உணவு, மா, மரம், புள், பறை, செய்தி, யாழின் பகுதி போன்றவை அடங்கும். உரிப்பொருள் ஒழுக்கம் பற்றியதாகும்.
தொல்காப்பியம் அகத்திணை ஏழு, புறத்திணை ஏழு என்ற கோட்பாட்டினைக் கொண்டுள்ளன. எனவே அகத்தோடு புறத்தை இணைத்துக் காட்டுகின்றது.
“அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர் புறத்திணை இலக்கணம் திறம்படக் கிளப்பின் வெட்சி தானே குறிஞ்சியது புறனே உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே” (தொல்.1002)
என அகத்திணையோடு பொருந்தி வருவதாகப் புறத்திணைக்கு இலக்கணம் கூறுகின்றது.
திணையுணரும் முறை
முதல், கரு, உரி ஆகிய மூன்றும் இணைந்ததை திணை என்போம். ஆனாலும் எல்லாப் பாடல்களிலும் முப்பொருளும் இணைந்து வராது. சில பாடல்களில் முதல், கரு,உரி ஆகிய மூன்றும், சில பாடல்களில் முதலும் உரியும், சில பாடல்களில் கருவும் உரியும், சில பாடல்களில் உரிப்பொருள் மட்டும் அமைந்து வரும். உரிப்பொருள் பாவின் உயிர்ப்பொருள் என்பதால் உரிப் பொருளின்றிப் பாடல் அமைவதே அகப்பொருள் என்கிறார் தொல்காப்பியர்.
கைகோள்
கைக்கொள்ளக்கூடிய ஒழுக்கம் கைகொள் ஆகும். அதாவது கடைப்பிடிக்கக்கூடிய வரைமுறையாகும். அளவில்லாத இன்பத்தை உடைய அன்பின் ஐந்திணைகள் பின்பற்றக்கூடிய ஒழுக்கம், களவு, கற்பு என இருவகைப்படும். திருமணத்திற்கு முந்தைய தலைமக்களது காதல் உறவு களவு எனப்படும். திருமணத்திற்குப் பிந்திய உறவு கற்பு என வழங்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக