பாரத நாட்டின் சரித்திரம் ஓர் உயர்ந்த கலாசாரத்தை உலகிற்கு எடுத்துரைக்கிறது. நன்கு ஆழமாக பார்க்கையில் பல்வேறுபட்ட மொழி, பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்கம், கலைகளிலும் வேறுப்பட்டிருந்தாலும் அவர்களில் ஓர் ஒற்றுமையைப் பார்க்கலாம். அது போன்று இன்று இவ்வனைத்து அம்சங்களும் மலேசியா திருநாட்டின் கலாச்சாரத்தோடு கலந்தாலும் அதனின் தொன்மை மாறமால் இன்னும் கலைத்துறையில் பிரத்யேகமான ஓர் இடத்தைப் பிடித்துள்ளது என்பதனை இன்று நடந்தேறிய அரங்கேற்றமேயாகும். மலேசியா வாழ் சிங்கள பெண் சகோதரி நிரோஷினி ரங்கணா அரங்கேற்றிய நிருத்யர்ப்பணம் தில்லையில் ஆடும் எம்பெருமானுக்கு ஓர் அற்புத அலங்காரமாகும். அவளின் நடன முறையும் தெளிவும் நளினமும் முன்னேற்றமுமடைந்த ஒரு கலை என அரங்கமே மெய் மறக்க வைத்தவள், நிரோஷினி ரங்கணா. குறிப்பாக கூறவேண்டுமென்றால் அவளின் நடனத்திற்கேற்ற அமைக்கப் பெற்ற இசை உருப்படிகளும் அபிநயமும், நிருத்தத்திலும் தாளத்திலும் உள்ள கலை நுணுக்கங்களும் சேர்க்கையினால் இவளீன் நடனம் ஒரு தனித்தன்மை வாய்ந்த கலையாக பரிமளிக்கிறது. சிங்களத்தில் நிரோஷினி ரங்கணா என்றால் அமைதியான நடனக் கலைஞராகும். அவளின் தாய் ...