சகோதரி நிரோஷினி ரங்கனா அவர்தம் நாட்டியக் குரு ஶ்ரீமதி குருவாயூர் உஷா துரையும் குரு அப்துல்லா அப்துல் அமீட் |
நாட்டியம் என்பதற்கு 'நட்' என்பதே சமஸ்கிருத மூலச் சொல்லாகும். 'நட்' என்றால் சிலர் நடனம் என்றும் நாடகம் என்றும் பொருள் கொள்கின்றனர். இந்த மூலச் சொல், இந்த இரண்டு கலைகளையும் குறிக்கும். ஏனென்றால் பண்டைய பாரதத்தின் நாடகம், நடனத்தை ஒரு அங்கமாகக் கொண்டிருந்தது. கதையையும் கருத்துகளையும் பாத்திரங்களின் குணச்சித்திரங்களையும் கதையில் வரும் சூழ்நிலைகளையிலும் இரசிகர்கள் மகிழ வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமாயின் கருத்துகளும் உணர்ச்சிகளும் சரியான முறையில் வெளிப்படுத்தப்பட வேண்டும். இதுவே, அபிநயமாகும்.
இதனை கருத்தில் கொண்டு, இன்று லாஸ்யா கலாலயம் , "மதுரை நாட்டிய மாமணி" குரு ஶ்ரீமதி குருவாயூர் உஷா துரை, குரு ஶ்ரீ அப்துல்லா அப்துல் அமீட் அவர்களின் மாணவி செல்வி நிரோஷினி ரங்கணா அவர்கள் கடந்த 13 ஆண்டுகளில் கற்ற கலையினை மலேசியா வாழ் மக்களுக்காகவும் எல்லா வல்ல இறைவனுக்கும் நிருத்யர்ப்பணம் செய்கின்றார்.
நிகழ்வின் குறிப்பு பின்வருமாறு:-
இடம் : DEWAN BANDARAYA KUALA LUMPUR
பக்கல் :14ஆம் செப்டம்பர் 2013
நேரம்: 7.00மாலை - 10.00மாலை
கலை ஆர்வாலர்கள் அனைவரையும் பெருமித்ததுடன் வருக வருகவென அழைக்கின்றோம். நுழைவு முற்றிலும் இலவசம். தொடர்புக்கு குரு ஶ்ரீமதி குருவாயூர் உஷா துரை (+6012-3237434).
கருத்துகள்
கருத்துரையிடுக