பாரத நாட்டின் சரித்திரம் ஓர் உயர்ந்த கலாசாரத்தை உலகிற்கு எடுத்துரைக்கிறது. நன்கு ஆழமாக பார்க்கையில் பல்வேறுபட்ட மொழி, பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்கம், கலைகளிலும் வேறுப்பட்டிருந்தாலும் அவர்களில் ஓர் ஒற்றுமையைப் பார்க்கலாம். அது போன்று இன்று இவ்வனைத்து அம்சங்களும் மலேசியா திருநாட்டின் கலாச்சாரத்தோடு கலந்தாலும் அதனின் தொன்மை மாறமால் இன்னும் கலைத்துறையில் பிரத்யேகமான ஓர் இடத்தைப் பிடித்துள்ளது என்பதனை இன்று நடந்தேறிய அரங்கேற்றமேயாகும்.
மலேசியா வாழ் சிங்கள பெண் சகோதரி நிரோஷினி ரங்கணா அரங்கேற்றிய நிருத்யர்ப்பணம் தில்லையில் ஆடும் எம்பெருமானுக்கு ஓர் அற்புத அலங்காரமாகும். அவளின் நடன முறையும் தெளிவும் நளினமும் முன்னேற்றமுமடைந்த ஒரு கலை என அரங்கமே மெய் மறக்க வைத்தவள், நிரோஷினி ரங்கணா. குறிப்பாக கூறவேண்டுமென்றால் அவளின் நடனத்திற்கேற்ற அமைக்கப் பெற்ற இசை உருப்படிகளும் அபிநயமும், நிருத்தத்திலும் தாளத்திலும் உள்ள கலை நுணுக்கங்களும் சேர்க்கையினால் இவளீன் நடனம் ஒரு தனித்தன்மை வாய்ந்த கலையாக பரிமளிக்கிறது.
சிங்களத்தில் நிரோஷினி ரங்கணா என்றால் அமைதியான நடனக் கலைஞராகும். அவளின் தாய் ஶ்ரீமதி தயாணி தன் மகள் வருங்காலத்தில் ஓர் அமைதியான சிறந்த நடனக் கலைஞராக வேண்டும் எனக் கருதியே இப்பெயரை அவளுக்குச் சூட்டியதனால் என்னமோ, அவள் உண்மையாகவே ஓர் அமைதியான, நிசப்தமான நடனக் கலைஞரென தன் நடனத்தால் நிரூபித்து விட்டாள்.
இவள் தன் கலைத்துறை வாழ்க்கையை 15 ஆண்டுகளுக்கு முன் நுண்கலை கலாலயத்தில் "மதுர நாட்டிய மாமணி" குரு ஶ்ரீமதி குருவாயூர் உஷா துரை, குருஶ்ரீ அப்துல்லா அப்துல் அமீட் அரவணைப்பில் தன் கலை பசியைத் தீர்த்துக் கொண்டாள். அதன் பின் அவள் தன் குருவைத் தொடர்ந்து லாஷ்யா கலாலயத்தில் அவள் சங்கீதம், பரதம் எனும் இரு கலைகளையும் கற்றுத் தெளிந்தாள்.
நிரோஷினி ரங்கணாவும் அரங்கேற்றமும்
நிரோஷினி அரங்கத்தை சிங்கள் நடனமான "கண்டி" நடனத்தோடு அதற்கு பிரத்யேகமான மேள தாளத்தோடு ஆரம்பித்தாள். நிரோஷினி ரங்கணா தன்னுடைய அரங்கேற்றத்தை ஹம்ச நிருத்தம், ராகமாலிகா இராகத்திலும் ஆதி தாளத்திலும் அன்னப் பறவை தன்மையை எடுத்துரைத்தாள். அவள் நன்கு தன் நடன வாயிலாக அன்னம் எவ்வாறு பாலயும் நீரும் பிரித்து எடுத்து உறிஞ்சுகிறதோ, நம் வாழ்க்கையில் அது போன்று எது நல்லது எது தீயவை எது என பிரித்து வாழ்ந்து இறையருளோடு தன் நடனத்தை அரங்கேற்றினாள்.
அதன்பின் கணேசா தியானத்தை கௌளை இராகத்திலும் தாளம் மாலிகா தாளத்திலும் ஶ்ரீமதி காமாட்சி ஜெயராமன் இயற்றிய பாடலுக்கு அபிநயம் பிடித்தாள். பரதநாட்டியக் கலைஞர்கள் கற்கும் நடனத்தின் முதல் அசைவு அலாரிப்பு (alarippu) எனப்படுகிறது. இதில் நிரோஷினி கடவுள், குரு, மற்றும் காண்போரையும் வணக்கம் செலுத்தினார். நட்டுவனார் துணை கொண்டு இவ்வசைவு செய்யப்பட்டது. நடனக் கலைஞரின் உடலை இலகுவாக்க உதவும். அலாரிப்பு என்றால் உடலும் மனமும் மலர்தல் என்று பொருள். இவ்வசைவு நான்கு அல்லது ஐந்து நிமிடங்கள் தொடர்ந்தது. அது மட்டுமின்றி நிரோஷினி புத்த ஸ்லோகத்தோடு ஒன்றிணைத்து ஆடினாள்.
அலாரிப்பு பின் தொடர்ந்து நிரோஷினி, சக்கரவாகம் இராகத்தில் ஆதி தாளத்தில் குரு ஶ்ரீ அச்சுதன் சசிதரன் நாயர் இயற்றிய ஜதிஸ்வரத்திற்கு நடனமாடி அனைவரையும் அவள் நடனத்தோடு ஒன்று சேர வைத்தாள்.
ஜதீஸ்வரம் என்பது நாட்டியத்திற்காக உருவாக்கப்பட்ட உருப்படி ஆகும். ஜதிக் கோர்வைகளை ஆதாரமாகக் கொண்டு அமைந்த உருப்படி ஆகையால் இதற்கு ஜதீஸ்வரம் என்ற காரணப் பெயர் ஏற்பட்டது. இவ்வுருப்படிக்கு சாகித்தியம் இல்லை. ஸ்வரூபமாக அமைந்த உருப்படியாதலால் "சுரபல்லவி" என்றும் அழைக்கப்படும். பொதுவாக இராகமாலிகையாக அமைந்த ஜதீஸ்வரங்களும் உண்டு. அதுமட்டுமின்றி சௌக்ககாலத்திலும், மத்திம காலத்திலும் அமைந்த ஜதீஸ்வரங்களும் உள்ளன. பொதுவாக நாட்டியத்ய கச்சேரியில் அலாரிப்பு ஆடிய பின் ஜதீஸ்வரம் தொடர்ந்து ஆடப்படும். ஜதீஸ்வரத்தை இசை கற்கும் மாணவர்கள் பயிலுவதால் ஸ்வர, லய, ஞானம் ஏற்படுகிறது. ஜதீஸ்வரத்தில் பல்லவி, அனுபல்லவி என்னும் அங்கங்களுடன் பல சரணங்களையும் கொண்டிருகும்க் என்பதை இங்கு வழியுறுத்துகிறேன்.
அதன்பின் வர்ணம், வர்ணம் என்னும் பாட்டு வகை பாடல் பயிற்சிக்கும் பாடல் அரங்க நிகழ்ச்சிகளுக்கும் (கச்சேரிகளுக்கும்) பொதுவாக இருக்கும் ஒரு பாடல் வகையாகும். குறிப்பாக இது பாடல் பயிற்சிக்கு மிக முக்கிய உருப்படியாகும். ஏனெனில் இதில் இராகங்களின் இலக்கணங்கள் தெளிவாக அமைந்திருக்கும். தான வர்ணங்கள், கச்சேரிகளின் தொடக்கத்திலேயே பாடப்படுகின்றன. பத வர்ணங்கள், நாட்டிய நிகழ்ச்சிகளில் முக்கிய இடம் பெறுகின்றன.
இராகங்களின் சிறப்பியல்பைக் (பாவத்தைக்) காட்டுகின்ற மனதை ஈர்க்கும் (ரஞ்சகப்) பிரயோகங்களை அந்தந்த இராகங்களில் அமைந்துள்ள வர்ணங்களில் காணலாம்.
வர்ணத்தின் பாடல் வரிகள் (சாகித்தியம்) குறைவாகவே காணப்படும். சாகித்தியமானது பக்தி விடயமாக, சிருங்கார விடயமாக, சங்கீதத்தை ஆதரித்த பிரபுக்களைப் பற்றியதாக அமைந்திருக்கும். வர்ணத்தை பூர்வாங்கம், உத்தராங்கம் என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். பூர்வாங்கப் பகுதியில் பல்லவி, அனுபல்லவி, முக்தாயிஸ்வரம் என்னும் அங்கங்களும், உத்தராங்கப் பகுதியில் சரணம், சிட்டை ஸ்வரம் என்பனவும் இடம் பெறும். சரணத்திற்கு உபபல்லவி, எத்துக்கடைப்பல்லவி, சிட்டைப்பல்லவி என்னும் மறு பெயர்களும் உண்டு. சிட்டைச் சுரங்களுக்கு சரண சுரங்கள், எத்துக் கடை சுரங்கள் என்னும் மறு பெயர்கள் உண்டு.
சிட்டை சுரத்தில் ஒரு வரிசைக் கிரமம் அமைந்துள்ளது. சரணத்தை அடுத்து வரும் முதலாவது சிட்டை சுரத்தின் ஸ்வரங்கள் நெடில் சுரங்களாக அமைந்திருக்கும். முதல் 2, 3 சிட்டை சுரங்கள் ஒற்றை ஆவர்த்தனமாகவும் பின்னர் வருபவை 2, 4 ஆவர்த்தனங்களாகவும் அமைந்திருக்கும். சில வர்ணங்களில் மூன்று ஆவர்த்தனங்களைக் கொண்ட சிட்டைச் சுரங்களும் உண்டு.
இதனைக் கருத்தில் நிரோஷினிக்காகவே வடிவமைத்த வர்ணம் 'நவரசமாகும்'. இவ்வர்ணம் லால்குடி மறைந்த ஶ்ரீ ஜெயராமன் அவர்கள் இராஜமாலிகா இராகத்திலும் ஆதி தாளத்திலும் அரங்கேறியது. மீனாட்சியம்மனின் அம்சத்தையும், சக்தி வலிமையும் தன் அபிநயத்தால் வெளிக்கொணர்ந்தாள்.
கடினமான ஜதிகளைக் கொண்ட வர்ணத்தை
நீண்ட
நேரம்
ஆடிய
பிறகு
சாவதான
முறையில்
அபிநயத்திற்கு
மட்டும்
முக்கியத்துவம்
அளித்து
சில
பதங்களை
ஆடும்
வழக்கம்
இருந்துவருகின்றது.
பதம்
என்ற
சொல்
பொதுவாக
வார்த்தைகளைக்
குறிப்பிடும்
பதம்,
பக்திப்
பாடலையொட்டியே வரும்.
பதம் எனும் இசைப்பாடலின்
அமைப்பில்
பொதுவாக
ஒரு பல்லவி,
ஒரு
அனுபல்லவி,
ஒன்றோ
அல்லது
அதற்க்கு
மேற்பட்ட
சரணங்களோ
உறுப்புக்களாக
விளங்குகின்றன.
அதன்
இசையும்
அனேகமாக
சௌக
காலத்திலோ
அல்லது
மத்யம
காலத்திலோ
அமைந்திருக்கும்.
பதங்களின்
பொருள்
அபிநயத்திற்கு
வாய்ப்பளிப்பதாக
அமைந்திருக்கும்.
பதங்களை
அபிநயிப்பது
எத்தனை
உணர்ச்சிபூர்வமாக
இருக்கவேண்டுமோ,
அதே
போல
பாடுவதும்
அமைந்திருக்கவேண்டும்.
பதத்தின்
இசையமைப்பு
அதில்
காணும்
கருத்துக்கு
ஏற்றவண்ணம்
அமைந்திருக்கும்.
கீழ்க்காலத்தில்
பாடப்படவேண்டிய
சில
பதங்களை
கையாளுவதை
இசைத்
துறையின்
வல்லுனர்களும்
பெரிய
சாதனையாகக்
கருதுவர்.
ஒவ்வொரு
பதமும்
அந்தந்த
ராகத்தின்
பல்வேறு
அம்சம்களையும்
பிழிந்தெடுத்துத்
தரும்
சாரமாக
அமைந்திருக்கும். பதங்களை நாட்டியதர்மி லோகதர்மி
ஆகிய
இரு
வழக்குகளிலும்
அபிநயிக்கலாம்.
பதம், ஹே பரமேஷ்வரா மோகன இராகத்திலும் ஆதி தாளத்திலும் சுவாமி சாந்தனந்த் சரஸ்வதி இயற்றிய பாடலுக்கு செல்வி நிரோஷினி ரங்கணா சிவ தாண்டவத்தை நன்கு வெளிப்படுத்தினாள். மேலும் இன்னொரு பதம் தன் தாயார் தயாணி ஹேமதாசா இயற்றிய பாடலுக்கு குரு ஶ்ரீமதி குருவாயூர் உஷா துரை ஆதி தாளத்தில் தேவதாசி ரங்கணா எனும் பதத்திற்க்குக் கிராமிய நடனத்தை அரங்கேற்றினாள்.
அதுமட்டுமின்றி, புத்த சரித்திரம் எனும் பாடலை டாக்டர் எம்.பாலதர்மலிங்கம் இயற்றிய பாடலுக்கு குரு ஶ்ரீமதி குருவாயூர் உஷா துரை இராகமாலிகா இராகத்திலும் ஆதி தாளத்திலும் புத்தரைப் பற்றி தன் நடனம் வழியாக சபையினோரை அமைதியான முறையில் கவர்ந்தாள்.
இறுதியாக, தில்லானா, ஒரு சம்பிரதாய நடனக்
கச்சேரியில்
நிருத்த
உருப்படிகளில்
இறுதியாக
ஆடப்படும்
உருப்படி
தில்லானாவாகும்.
அதாவது
மங்களத்தின்
முன்
ஆடப்படும்.
இத்திள்ளான
நாத்துருதீம்,
தனதிரனா,
தம்,
தத்தீம்
போன்ற
சொற்கட்டுக்களை
மையமாகக்
கொண்டு
இயற்றப்பட்ட
உருப்படியாகும்.
இது
மத்திம
காலத்தில்
அமைக்கப்பட்டிருக்கும்.
இசை,
நடனம்
ஆகிய
இரண்டு
கச்சேரிகளுக்கும்
இது
பொதுவானதாகும்.
இதன்
அங்கங்கள்
பல்லவி,
அனுபல்லவி
என்பவற்றைக்
கொண்டிருக்கும்.
சில
தில்லானாக்கள்
பல்லவி,
சரணம்
என்பவற்றைக்
கொண்டிருக்கும்.
சரணத்தில்
இரண்டுவகை
சாகித்தியம்
காணப்படும்.
பாடும்
பொது
இதன்
பல்லவியினை
பலமுறை
பாடுவார்.
இதற்க்கு
தாள
வின்யாஸ
முறையில்
பலவிதமான
அடவு
ஜாதிகள்
கோர்வைகளாக
ஆடப்படும்.
பிருந்தவன சாரங்கம் இராகத்தில் ஆதி தாளத்திலும் டாக்டர் ஶ்ரீ எம். பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் இயற்றிய தில்லானவுக்கும் ஆனந்தத்தோடு நடனமாடி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார் நிரோஷினி ரங்கணா.
நிரோஷினி ரங்கணாவின் நடனத்தை அங்கீகரிக்கும் வகையில், லாஷ்யா கலாலயம் அவளுக்கு "நிருத்ய தாரா" நிரோஷினி ரங்கணா எனும் பட்டத்தை வழங்கினார் குரு ஶ்ரீமதி குருவாயூர் உஷா துரை அவர்கள்.
இன்று மருத்துவத் துறையில் கல்வி பயில செல்லவிருக்கும் சகோதரி நிரோஷினி ரங்கணாவை மனதார வாழ்த்துகிறேன்.
இறுதியாக, மனம் ஒன்றுபட்டு லயிக்காமல் செய்யப்படும் எந்த வேலை மன அமைதியையும் சந்தோசத்தையும் அளிக்க முடியுமா? இல்லை, ஆகவே மனம் லயிக்காமல் செய்யப்படும் எந்தத் தொழிலும் பயனளிக்காது. நிருத்தமும் அதே தான். இதனையொட்டி பரத முனிவர் ஓர் அழகிய பாடலைத் தந்துள்ளார்:-
யதோ ஹஸ்தஸ் ததோ திருஷ்டி
யதோ திருஷ்டிஸ் ததோ மனஹ
யதோ மனஸ் ததோ பாவாஹ
யதோ பாவஹஸ் ததோ ரஸஹ
நடனமாடுபவர் யாவரும், கையோடு கண்களையும் அசைத்து மனதை அதில் செலுத்தி, அநுபவித்து மகிழ்ந்தால் பார்ப்பதற்கு இரசிக்கும் வண்ணம் அமையும் என்பதாகும்.
நின் தொடரட்டும் உன் ஆடல் கலை....
hai ilanthamizhl... enakoru help... niroshini atina angayarkani varnam lyrics venum..post panunga plz... :)
பதிலளிநீக்கு