முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கற்பியல் பிரிவினை வகைப்படுத்திக் காட்டியிருக்கும் சங்க இலக்கியம்


களவு வாழ்க்கை நீண்ட நாட்களுக்கு தொடர முடியாததாகும். ஆக, சங்க இலக்கியங்களில் கற்பியல் பிரிவினை மிக தெளிவாக தொல்காப்பியத்தில் எடுத்துரைத்துரைக்கப்பட்டுள்ளன. திருமணத்திற்கு பின்பு தொடங்குவதே கற்பு வாழ்க்கையாகும். காதலித்துத் திருமணம் செய்யும் களவின் வழிக் கற்பும் மூத்தோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்யும் கற்பும் என இரு வகைகளாக வகுக்கின்றனர்.

கற்பு வாழ்வில் புணர்ச்சி என்பது பெற்றோரால் செய்து வைக்கப்பட்ட திருமணத்தில் கூடும் புணர்ச்சி, தலைவியின் ஊடலைத்தவிர்க்கும் வாயின் வழிக்கூடும் புணர்ச்சி என இருவகைப்படும்.களவின் வழிக்கூடிய தலைமகளை தலைமகன் தன் ஊருக்கு அழைத்துச்சென்று திருமணம் செய்து கொள்ளுதல் சூழலில் தலைமகளின் சுற்றத்தாரால் செய்து வைக்கும் திருமணமின்றி களவுவழிக் கற்பில் புணர்ச்சி நிகழ்ந்துவிடும்.

கற்பில் தலைவனுக்கு இருவகைப் புணர்ச்சிகள் நிகழும்.களவின் வந்த புணர்ச்சியும் களவின் வழி அல்லாமல் திருமணம் செய்துக்கூடும்புணர்ச்சியும் ஆகும். மேலே குறிப்பிட்ட இரு வகைப் புணர்ச்சிக்கும் காதல் பரத்தை, காமக்கிழத்தி, இர்ண்டாம் திருமணம் செய்து கொண்ட குல மகளிர் ஆகிய மூவரும் அடங்குவர். காதல் பரத்தை மறைவாகப் புணர்தற்குரிய காமக்கிழத்தியும்,பெருங்குலக் கிழத்தியும் திருமணம் செய்து கொண்டுகூடுவதற்கு உரியர்.

கற்பில் பிரிவு

கற்பில் பிரிவு எனப்படுவது அகப்பொருள் இலக்கணத்தில் மிக சிறப்புகளைக் கொண்டதாகும். திருமண வாழ்விற்கு பின்பு தலைவன் தலைவி பிரிந்து செல்லுதலே பிரிவு என பகுதியாக குறிப்பிடுகின்றனர். களவிலும் சரி, கற்பிலும் சரி பிரிவினை என்பது இருவகை வாழ்க்கையிலும் நிகழ்க்கூடியதாகும். அவ்வகையில் அகப்பொருளில் தனி இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளன. தமிழர்களின் வாழ்வியல் எத்தகைய மாண்பினைக் கொண்டிருக்கிறது என்பதனை இதுவே ஒரு சாட்சியாகும்.

களவில் இருந்து கற்பு வாழ்க்கைக்கு மாறும்பொழுது தலை பல காரணங்களுக்காக தலைவியை விட்டு பிரிதல் நடைபெறுகின்றன. அத்தகைய பிரிவினை வகைகள்:-

௧. பரத்தையிற் பிரிவு

தலைவியை மணந்து இல்லறம் மேற்கொள்ளும் கற்பியல் வாழ்க்கையின் போது தலைவன் பிற மகளிரைப் உறவுக் கொள்வதற்கு பிரிதல் உண்டு. பரத்தை காரணமாகப் பிரியும் பிரிவு அருகில் இருக்கும் மனையிடத்துப் பிரிதலாகும். தலைவன் அருகில் இருக்கும் குடியிருப்பிற்குச் செல்லுதல்,நகருக்கு வெளியே இருக்கும் புறநகருக்குப் பிரிதலும் வளம்மிக்க தலைவனுக்குரிய பிரிவுகளாகும்.

அன்பு கொண்ட காமக்கிழத்தி காரணமாக அவளைத் தழுவும் பொருட்டுத்தலைவன் அருகிலுள்ள வீட்டிற்கு பிரிவது அயல்மனைப் பிரிவாகும். இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்ட பெதும்பைக்காகவும், பரத்தைக்காகவும் இனிமை பொருந்திய விழாவிற்காகவும் அயற்சேரிக்குத் தலைவன் பிரிந்து செல்வான். சோலையில் விளையாடுவதற்கும் நீர் விளையாட்டிற்காகவும் புதிய பரத்தையை தேரிலேற்றிக்கொண்டு புறநகருக்குப் பிரிவான் தலைவன். இத்தகைய பிரிவுகளில் தலைவிக்கும் தலைவனுக்கு சிறு ஊடல் ஏற்படும். அந்த ஊடலைத் தீர்த்து வைப்பவர்கள் வாயில்கள்.

௨. ஓதற்ப்பிரிவு

கல்வி கற்கும் பொருட்டு அந்தணரோ, அரசரரோ, வணிகரோ மூன்றாண்டு காலம் பிரிவர்.கல்வி அல்லாத வில்,வாள், வேல் ஆகிய பயிற்சியும் யானை,குதிரை, தேர் செலுத்தும் பயிற்சியும் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வர்க்கும் உரியது. இதுவும் மூன்றாண்டு காலம் நிகழும். மேலும் கல்வி கற்பதற்காகப் பிரிபவந் இடையில் திரும்பி வருவதில்லை. அங்கு தலைவியைநினைத்து புலம்பவும் மாட்டான்.

௩. காவற்பிரிவு

காவற் பிரிவு இருவகைப்படும். காவல் புரிவதற்காக மேற்கொள்ளும் பிரிவே இது.

௩.௧ அறப்புறம் காவல்

அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வருக்கும் காலவரையின்றி பொருந்தும். கோயில் முதலான அறநிலையங்களைப் பாதுகாக்கப் பொருட்டு தலைவன் எதிர்கொள்ளும் பிரிவாகும்.

௩.௨ நாடு காவல்

ஒரு நாட்டைக் காக்கும் பொருட்டுப் பிரிதலே காவற்பிரிவாகும். நாடுகாவல் பிரிவானது அரசனுக்கும் அரசனால் சிறப்புப் பட்டம் பெற்ற வணிகரும், வேளாளர் ஆகியோருக்கும் உரியதாகும்.

௪. தூதிற் பிரிவு

பகைகொண்ட பிறநாட்டு அரசனனிடம் சென்று பேசி அவனது பகையை மாற்றும் பணியை ஆற்றும் செயலே தூதுப் பிரிவாகும். தூதிற் பிரிவு அந்தனர் அரசர் ஆகிய இருவருக்கும் உரியதாகும். மேலும் அரசனால் சிறப்புப் பட்டம் பெற்ற வணிகர், வேளாளருக்கு உரியதாகும். இதன் காலவரையறை ஓராண்டாகும்.

௫. துணைவயிற் பிரிவு

அரசனுக்கு உதவும் பொருட்டுப் பிரியும் துணைவயிற் பிரிவு, அந்தணரல்லாத அரசர், வணிகர், வேளாளர் ஆகிய மூவருக்கு ஓராண்டு காலவரை பிரிவர்.

௬. பொருள்வயிற் பிரிவு

தலைவன் பொருளீட்டுவதற்காக ஓராண்டு காலம் தலைவியை விட்டு பிரிவர். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வருக்கும் ஓராண்டு காலவரை பிரிவர்.

கற்பில் தலைவன்பரத்தை, கல்வி, தூது, காவல் எனும் நான்கு நிலைகளில் பிரிவான்.இவ்வகை பிரிவுகளில் தலைவன் தலைவியிடம் சொல்லிப் பிரிதலும் சொல்லாமல் பிரிதலும் உண்டு. இருப்பினும் குறிப்பால் உணர்த்தியாவது பிரிவ வேண்டும்.

பிரியநினைக்கும் தலைவன் பிரியாமல் வீட்டிலே தங்கி விடுவதும் இடைச்சுரத்தில்சென்று பிரியாமல் திரும்பி விடுதலும் உண்டு. கல்வியிற் பிரிவில் மட்டும் தலைவன் திரும்பி வருவதில்லை. இது நம்முன்னோர் கல்விக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. மேலும் பிரிவில் பெண்களைக் கடல் வழியும், போரின் காரணமாகவும் உடன் அழைத்து செல்வதில்லை. நீண்ட நாள் பயணத்தில் ஏற்படு அசௌகரியங்களும் பிற ஆடவரின் வழி நிகழும் தொல்லைகளும் தவிர்க்கவே பெண்டிரை இப்பிரிவுகளில் அழைத்துச் செல்வதில்லை.

பரத்தையின் பிரிவில் தலைவன் , தலைமகள் மாதப்பூப்பெய்திய நான்காவது நாளிலிருந்து பன்னிரண்டாம் நாள் வரை பிரியக்கூடாது என்ற வரையறையை நம் முன்னோர் வைத்துள்ளனர். இன்றைய நவீன கண்டு பிடிப்புகள் இல்லாத காலத்தில் நம் முன்னோரின் மருத்துவ அறிவைப் பறைசாற்றும் விதமாக இந்நிகழ்வு அமைந்துள்ளது. இக்காலங்களில் வயிற்றில் கரு உண்டாவதால் இதனை வலியுறுத்தியுள்ளனர்.

முடிவுரை

சங்க இலக்கியப் பாடல்கள் அனைத்தும் தமிழுக்கே உரிய இலக்கிய மரபுகளை மையமாகக் கொண்டு, மக்களின் பண்பாட்டு மரபுகளையும் நாகரிக வாழ்க்கையின் சிறப்புகளையும் விளக்குகின்றன. சங்ககால மக்களின் ஒழுக்கம் மற்றும் பண்பாட்டு நெறிமுறைகள், செயல்பாடுகள் அனைத்தும் இன்றைய சமுதாயத்திற்கு முன்னோடியாகத் திகழ்ந்து வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழிவகுக்கின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அகத்திணையின் களவு வாழ்க்கை கற்பியல் வாழ்க்கை என்னும் வரையறையின் பொருள் நோக்கம்...

உ லகியல் பண்பினைப் போற்றும் வகையில் தமிழ் இலக்கணம் அமைக்கப்பட்டுள்ளது என்னும் கூற்றினை மெய்ப்பிப்பதற்குக் காரணமாய்த் திகழ்வது பொருளிலக்கணமே ஆகும். பொருளிலக்கணத்தை அகம், புறம் என்று இரண்டாகப் பகுத்துத் தொல்காப்பியம் விளக்குகிறது. தொல்காப்பியரின் இவ்வகைப்பாடு பிற்கால இலக்கண நூல்களில் இரு வகை இலக்கணமாகத் தோற்றம் பெற்றது. இறையனார் அகப்பொருள், நம்பியகப் பொருள், மாறனகப் பொருள் என்று அகம் குறித்துரைக்கும் நூல்கள் எழலாயின. பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய நூல்கள் புறப்பொருளை விளக்குவனவாகும். இப்பகுப்பினை ஒட்டியே ஐந்திலக்கண நூல்கள், பின்னெழுந்த இலக்கண நூல்கள் பிரித்துரைக்கப்பட்டுள்ளன.தொல்காப்பியப் பொருளிலக்கணம் கூறும் அகப்பொருள் மரபினை வகைமை நோக்கில் ஆராய்ந்துரைக்கும் வண்ணம் இக்கட்டுரை அமைந்துள்ளது.   பொருளிலக்கணம் - அகத்திணை  பொருள் என்பதற்குத் தமிழில் பல பொருள் கொள்ளலாம். ஒரு பொருள்(Object) என்றும் செல்வம் (Wealth) என்றும் சொல்லுக்கான பொருள் விளக்கம் (synonyms) என்றும் மெய்ப்பொருள் என்றும் பல்வகை நிலையில் நின்று பொருள் கொள்ளலாம். பொருள் என்னும் சொல்லிற்குத் தமிழில் முப்பத்திரண்டு

அகத்திணைப் பாடல்கள்வழி அன்றைய வாழ்வியல் கூறுகள்

முன்னுரை :  'தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவனுக்கொரு குணமுண்டு' என்று கூறும் நாமக்கல் கவிஞர் வரிகளில் உள்ள உண்மைத் தன்மை அகிலத்தோரால் போற்றப்படுகிறது. இதனையே தமிழ் இலக்கியங்களும் கூறுகிறது. சிற்பம், கட்டிடக்கலை, போர், இசை, கனிமவளம், மருத்துவம் என அனைத்திற்கும் முன்னோடியாகத் திகழ்பவன் தமிழன். அதற்குமட்டுமல்ல பலமணம் செய்து கொண்டு திருமணம் என்று அவ்வுறவைக் கொச்சைப் படுத்தும் மனிதர்களுக்கிடையே ஒருவனுக்கு ஒருத்தி என்னும் உன்னத கோட்பாட்டோடு வாழ்ந்து குடும்ப வாழ்வியலுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறான் அதனையே சங்க இலக்கிய நூல்களும் இயம்புகின்றன. இல்லற வாழ்வியலை அகத்திணை என்று பெயரிட்டு அதற்கென இலக்கணங்களையும் வகுத்துள்ளான். அதைக் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.  அகத்திணை : நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையையே சங்க இலக்கியங்கள் இயம்புகின்றன. பண்டையக் காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியலை தமிழ் இலக்கியங்கள் அகவாழ்வு, புறவாழ்வு என இரண்டு வகையாக வகுத்துள்ளது. இதில் புறவாழ்வு என்பது தலைவன் மேற்கொள்ளும் போர் சிறப்பு பற்றியதாகும். ஆனால் அகவாழ்வு என்பது ஓர் ஆணும் பெண்ணும் கண்களால் காதல