முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தீபாவளி பரிசு: இந்திய ஆசிரியர்கள் அதிர்ச்சி

தமிழ் மலர் நாளிதழில் வெளியேறிய செய்திச் சுருள்.. தமிழ் மலர் நாளிதழில் பிரசுரமான செய்தி ஒன்றுயொட்டி முகநூல் நண்பரும் சாகோதரியுமான செல்வி உதயகுமாரின் கருத்து என்னவென்றால் "என் கருத்து என்னவென்றால் மலாய்க்காரர்களைக் குறை சொல்வதை விடுத்து முதலில் நம் ஆட்களைக் கேள்வி கேட்கவேண்டும்... தமிழ்ப்பள்ளிகளோடு தொடர்புடைய பல முக்கிய போட்டிகளே தீபாவளி,விநாயகர் சதுர்த்தி போன்ற நமக்கு முக்கியமான தினங்களில்தான் நடத்தப்படுகின்றன..இன்னும் பல விசயங்கள் உண்டு..ஏன் தீபாவளி நெருங்கும் இந்த வாரத்தில் கூட மதிய வேளைகளில் நிகழ்வுகள் உண்டு..தீபாவளி வாரத்திலேயே பள்ளிகளில் பரிசளிப்பு உள்ளிட்ட சில முக்கிய நிகழ்வுகள் உண்டு.  இதையெல்லாம் மலாய்க்காரர்கள் ஏற்பாடு செய்யவில்லை. நம்மவர்கள்தான்.நோன்புப் பெருநாள்,சீனப்புத்தாண்டுக்கு ஒருவாரம் விடுப்பு எடுக்கலாம் என அரசாங்கம் சொன்னாலும் தமிழ்ப்பள்ளிகள் ஒருநாள் விடுமுறையோடு பள்ளியைத் தொடக்கிவிடும்.பிறகு மற்ற இனத்தவர்கள் விடுமுறையை ஈடுகட்டும் தினத்தில் நம் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படும்.நாம் இவ்வாறு செய்வதால் பிற இனத்தவர்கள் என்ன செய...

குறிஞ்சித் திணை குறுஞ்செயலி

எனது தட்டைக் கணினியில் இப்படித்தான் காண்பிக்கிறது தற்போது திறன்பேசிகள் வெகுவாக பற்பல தொழில்நுட்ப ஊடக வசதிகளை நமக்கு அளித்து வருகிறது , அதனுடன் பல மின்னணு சாதனங்களை இணைத்து பயன்படுத்துவது இன்னும் ஒரு கூடுதல் நன்மையாகும். குறிப்பாக தட்டைக் கணினி- ஆண்ராய்டு ஆகிய சாதனங்களை WIFI கொண்டு தொலைமுக(Remote) முறையில்  இணைத்து அதன் மூலம் கோப்புகளை இவைகளுக்கிடையே பரிமாறிக்கொள்வதுக்கென பல ஆன்ராய்டு பயன்பாடுகள்(Apps) கூகிள் சந்தையில் இலவசமாக கிடைக்கின்றன.  திறன்பேசியில் இப்படித்தான் காண்பிக்கிறது இதனைக் கருத்தில் கொண்டு  இணையத்தளத்தை இனி குறுஞ்செயலி வாயிலாக நாம் பரிமாறிக் கொள்ளவே  அவன் கிருபையினால் தமிழுக்கு மின்னியல் ஆபரணங்களை கொண்டு அழங்கரிக்க உங்கள் முன் குறிஞ்சித்திணை உங்கள் கரங்களில் தவழவிடுகின்றேன். குறைகள் இருப்பின் சுட்டிக்காட்டவும். திருத்திக் கொள்கிறேன்.  குறிஞ்சித் திணை பதிவிறக்கம் *** இங்கே சொடுக்கவும்!! உங்களில் ஒருவன், தனேஷ் பாலகிருஷ்ணன் மின்கல்வி தொழில் நிபுணர் மலேசியா.

திருக்குறள்

நண்பரே உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துகள் . மென்மேலும் அவன் கிருபையினால் தமிழுக்கு மின்னியல் ஆபரணங்களை கொண்டு அழங்கரிப்போம். https://play.google.com/store/apps/details?id=com.omtamil_tirukkural

நிருத்யர்ப்பணம்: "நிருத்யா தாரா" நிரோஷினி ரங்கண ஹேமதாஸா

பாரத நாட்டின் சரித்திரம் ஓர் உயர்ந்த கலாசாரத்தை உலகிற்கு எடுத்துரைக்கிறது. நன்கு ஆழமாக பார்க்கையில் பல்வேறுபட்ட மொழி, பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்கம், கலைகளிலும் வேறுப்பட்டிருந்தாலும் அவர்களில் ஓர் ஒற்றுமையைப் பார்க்கலாம். அது போன்று இன்று இவ்வனைத்து அம்சங்களும் மலேசியா திருநாட்டின் கலாச்சாரத்தோடு கலந்தாலும் அதனின் தொன்மை மாறமால் இன்னும் கலைத்துறையில் பிரத்யேகமான ஓர் இடத்தைப் பிடித்துள்ளது என்பதனை இன்று நடந்தேறிய அரங்கேற்றமேயாகும். மலேசியா வாழ் சிங்கள பெண் சகோதரி நிரோஷினி ரங்கணா அரங்கேற்றிய நிருத்யர்ப்பணம் தில்லையில் ஆடும் எம்பெருமானுக்கு ஓர் அற்புத அலங்காரமாகும். அவளின் நடன முறையும் தெளிவும் நளினமும் முன்னேற்றமுமடைந்த ஒரு கலை என அரங்கமே மெய் மறக்க வைத்தவள், நிரோஷினி ரங்கணா. குறிப்பாக கூறவேண்டுமென்றால் அவளின் நடனத்திற்கேற்ற அமைக்கப் பெற்ற இசை உருப்படிகளும் அபிநயமும், நிருத்தத்திலும் தாளத்திலும் உள்ள கலை நுணுக்கங்களும் சேர்க்கையினால் இவளீன் நடனம் ஒரு தனித்தன்மை வாய்ந்த கலையாக பரிமளிக்கிறது.  சிங்களத்தில் நிரோஷினி ரங்கணா என்றால் அமைதியான நடனக் கலைஞராகும். அவளின் தாய் ...

லாஸ்யா கலாலயம்-நிருத்யர்ப்பணம்

சகோதரி நிரோஷினி ரங்கனா அவர்தம் நாட்டியக் குரு ஶ்ரீமதி குருவாயூர் உஷா துரையும் குரு அப்துல்லா அப்துல் அமீட் நம்மினத்தவரின் கலாச்சாரத்தில் சூடாமணியாக ஒளி வீசுவது நாட்டியக்கலையாகும். இக்கலையானது காலத்தால் முதுமை பெற்று, என்றும் இளமை குன்றாத சிறப்புத்தன்மை வாய்ந்தது என்றால் மிகையாகாது. 2000 ஆண்டுகளாக உலகமெங்கும் பரவிக் கிடக்கும் இப்பழமை வாய்ந்த கலைக்கு இலக்கணம் வகுத்தவர் பரத முனிராவார். அவர் எழுதியருளிய "நாட்டிய சாஸ்திரம்" என்ற சமஸ்கிருத நூலில் எடுக்கப்பட்டவைதான் நாட்டியக் கோட்பாடு. நாட்டியம் என்பதற்கு 'நட்' என்பதே சமஸ்கிருத மூலச் சொல்லாகும். 'நட்' என்றால் சிலர் நடனம் என்றும் நாடகம் என்றும் பொருள் கொள்கின்றனர். இந்த மூலச் சொல், இந்த இரண்டு கலைகளையும் குறிக்கும். ஏனென்றால் பண்டைய பாரதத்தின் நாடகம், நடனத்தை ஒரு அங்கமாகக் கொண்டிருந்தது. கதையையும் கருத்துகளையும் பாத்திரங்களின் குணச்சித்திரங்களையும் கதையில் வரும் சூழ்நிலைகளையிலும் இரசிகர்கள் மகிழ வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமாயின் கருத்துகளும் உணர்ச்சிகளும் சரியான முறையில...

கைகளில் தவளும் இனிய சுதந்திரம்

இன்று செல்லியலில் நான் எழுதியக் கவிதை பதிவேற்றமாகியுள்ளது. மிக்க நன்றி செல்லியல், எமக்கும் வாய்ப்பளித்தமைக்கு. கவிதை கீழ்வருமாறு... அன்று அமாவாசையாய் இருள் சூழ்ந்து கிடந்த அடிமைத்தனம் விலகி பௌர்ணமி பிறந்தது இன்றைய நாளிலே! மொழி வேறாயினும், இனம் வேறாயினும் ஒன்றாய் கூடி வாழ்வதும் இத்திருநாட்டிலே! ஒற்றுமை கொடியை நாட்டி உலகமே வியக்க அன்பை ஊட்டி ஒரே மலேசியராய் வாழ்ந்து காட்டி ஏட்டினில் எழுதுவோம் என்றும்… இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்… ஆக்கம் தனேஷ்@தினகரன் பாலகிருஷ்ணன் மூலம்:   http://www.se lliyal.com/?p=37591