"கழிவறையும், பழிவாங்கும் முறையும்" எனும் சிறுகதை தமிழ் ஆர்வாலர்களின் மத்தியிலும் சரி சமயம், மதம் சார்ந்த அமைப்பிலும் சரி இன்று கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. தன் தவற்றை உணர்ந்து தயாஜி மன்னிப்புக் கோரி இருக்கிறார்.
தமிழ் மலர் 06/12/2013 |
இருப்பினும் இன்று பெரும் சர்ச்சையாக இருப்பது தயாஜி எழுத்து மட்டுமில்லை, அதனை ஆதரித்து விமர்சனம் வழங்கிய வல்லினம் ஆசிரியர் ம.நவீன் "தாய்மை என்பது புனிதமா?" எனும் கேள்வியே வாசகர்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாதிரியான வினாக்களைத் தொடுக்கும் முன் ஆசிரியர் கொஞ்சம் நிதானத்தோடு செயல்பட்டிருக்க வேண்டும். அறிவிழந்து தாய்மை விவாதித்ததில் வன்மையாக கண்டிக்கிறேன்.
வல்லினம் ஆசிரியர் ம.நவீன் |
எப்படி இதையெல்லாம் யோசிக்காமல், தாய்மையை கொச்சைப்படுத்த உங்கள் எண்ணத்தில் தோன்றியது என தெரியவில்லை. மேற்கத்திய உதாரணங்களைக் காட்டாமல், நம் நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் நன்கறிந்து எழுதுங்கள். திரும்பவும் கூறுகிறேன், தளம் கிடைத்திருக்கு என்று எது வேண்டுமென்றாலும் எழுதலாம் என நினைக்காதீர்கள். இதையெல்லாம் கண்டு நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்.
மலேசியாவில் பிறந்து வளர்ந்த தாங்கள் தேசிய கோட்பாட்டினை நன்கு அறிவீர்கள் என நம்புகிறேன். இல்லையென்றால், முதலில் அதையாவது படித்து தெளிவடையுங்கள் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் '' என்பது நாட்டின் தேசிய கோட்பாடுகளில் தலையாயனது.
''சமூகம் '' சிறுபான்மையினர் எனினும் அவரவர் சமய வழிபாட்டுக்குச் சுதந்திரம் உண்டு. மரபுடன் சமரச சன்மார்க்கம் கண்ட பரம்பரை நம் இந்திய சமூகம். ''சநாதன தர்மம் " என்ற சிறப்பும் இந்து சமயத்திற்கு உண்டு.
"சிறப்புக்குரிய " சிறிய சமூகத்திற்க்கு உள்ள சமயச் சிறப்புக்கு தமிழன் ஆற்றும் ஆற்றக் கூடிய சாத்தியம் என்ன? இளையோர்களை எப்படி இணைக்கலாம்? அவர்களை சமயத்தின் பால் ஆர்வம் கொள்ளவது எப்படி ? இதனை காலத்தையொட்டிச் சிந்திக்க வேண்டும். அதனைவிடுத்து தமிழ் என்ற போர்வையில் ஆபாசக் கதைகளை தெய்வத்தோடு சேர்த்து எழுதக்கூடாது. குழந்தைகளின் மத்தியில் விசமங்களை விதைக்காமல், நல்ல கருத்துகளை விதைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
காலமெல்லாம் புத்தாக்கச் சிந்தனை எனக்கூறி தமிழோடு சமயத்தையும் அழித்து விடாமல்; தமிழ் இலக்கிய மரபுகளோடு நல்நெறியையும்; மலேசியா திருநாட்டில் நம்மையும் காத்து, நடப்பில் காலத்தையும் கணித்து வாழத்தெரிந்து செயல்பட வேண்டும். அதன் பின் நடைமுறைச் சாத்தியங்களை நன்கு ஆராய்ந்து மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சி நல்வழியில் காணவேண்டும் என்பதே எமது அவா !
ஆக்கம்,
தனேஷ்@தினகரன்
கருத்துகள்
கருத்துரையிடுக