நட்பு இல்லாத மனிதன் இவ்வுலகில் இல்லை என்றே கூறுமளவிற்கு நட்பு வாழ்கையில் முக்கிய பங்கெடுத்துக் கொள்கின்றது. ஒவ்வொரு மனிதனின் தன் வாழ்க்கை பருவங்களிலும் நண்பர்கள் கிடைக்கின்றார்கள், அவற்றுள் சிலர் ஆரம்ப கால அரை காற்சட்டை வாழ்ககையோடு விடைபெறுகிறார்கள். மேலும் கல்லூரிக்கால வாழ்க்கையோடு நின்று போய் விடுகிறார்கள். வேறு சிலர் அலுவலக வட்டத்துக்குள்ளேயே ஓடி ஓய்ந்து விடுகிறார்கள். இன்னும் சிலர் வாழ்க்கைத் துணையாகவும் மாறிவிடுகின்றார்கள்.
மிகவும் குறைந்த எண்ணிக்கையின் நண்பர்களே இந்த எல்லைகளை எல்லாம் தாண்டி எமது இதயத்தின் மேடையில் கூடாரமடித்துக் குடியிருக்கிறார்கள். நமது வாழ்க்கையின் பாதையில் நண்பர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. இளம் வயதில் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவதால் நண்பர்களின் குணாதிசயங்கள் நம்மையும் தொற்றிக் கொண்டு விடுகிறன. ஆகவே, நாம் தாம் சேற்றில் எவ்வாறு செந்தாமரை மலர்கிறதோ, அவர்கள் மத்தியிலும் நாம் மாசுப்படாமல் தெளிந்த நீராக இருத்தல் வேண்டும்.
ஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாக இருக்கிறார்கள். அதனால்தான் நமக்கு அமையும் நண்பர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. அதனால் போலும் வள்ளுவன்
"அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு "
அதாவது, அழிவு தரும் வழிகளில் நண்பன் சென்றால் தடுத்து, நல்ல வழியில் அவனைச் செலுத்தி அவனுக்குக் கேடு வரும் என்றால் அதை அவனுடன் பகிர்வது நட்பு.
கருத்து பகிர்வு,
தனேஷ்@தினகரன்
கருத்துகள்
கருத்துரையிடுக