முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வகுப்பறையில் நடக்கும் நிகழ்வுகளைப் பதிவு செய்வதன் நெறிமுறை சிக்கல்கள்

ஆசிரியராகப் பணிபுரிந்த அனுபவத்தில், "வகுப்பறையில் நடக்கும் எல்லாவற்றையும் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிரலாமா?" என்ற கேள்வி எனக்கு அடிக்கடி எழுகிறது. ஆரம்பத்தில், இந்த யோசனை எந்தத் தீங்கும் விளைவிக்காது என்று தோன்றியது. மகிழ்ச்சியான தருணங்கள், படைப்புச் செயல்பாடுகளும் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கும் தருணங்களைப் பதிவு செய்வது கற்றலைச் சிறப்பித்து, கொண்டாட ஒரு வழியாக இருக்கலாம். ஆனால், நவீன கல்வியின் சிக்கலான தன்மைகளை நான் புரிந்துகொண்டபோது, இந்தப் பழக்கம் சில முக்கியமான நெறிமுறை சிக்கல்களைக் கொண்டுள்ளது என்பதை உணர்ந்தேன். இது குறித்து நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். ஆசிரியரா அல்லது உள்ளடக்க உருவாக்குநரா? ஒரு காலத்தில், பாடங்களைப் பதிவு செய்வதிலும், மாணவர்கள் திட்டங்களில் முழுமையாக மூழ்கியிருக்கும் படங்களை எடுப்பதிலும், அவர்களின் உற்சாகமான பதில்களைப் பதிவு செய்வதிலும் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், இஃது ஒரு பழக்கமாக மாறியபோது, என்னுடைய பாத்திரம் என்ன என்ற கேள்வி எனக்குள் எழுந்தது - நான் இன்னும் ஓர் ஆசிரியராகத்தான் இருக்கிறேனா அல்லது என்னையும் அறியாமல்...