முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியர்களின் பாரம்பரிய நடனம்; சிறப்புக் கண்ணோட்டம்

இந்திய பாரம்பரியத்தின் கௌரவம் என்றாலே நம்முடைய ஆடற்கலைகள் தான். அதில் தமிழ்நாட்டின் நடனம் பரதநாட்டியம்
திருமதி ஹேமநந்தினி-மலேசியா,
அம்ஷவாதினி சபா நாட்டிய விழா, சென்னை
  1. இந்தபரத நாட்டியம் எவ்வாறு தோன்றியது ?
  2. யாரால் தோற்றுவிக்கப்பட்டது
பரதம் என்ற சொல் எதைக் குறிக்கிறது என்பதைப் பார்க்கலாம்பரதம் என்ற வார்த்தை
  • --பாவம்
  • -- ராகம்
  • -- தாளம்
  • ம் -- ஸ்ருதி 

இந்நான்கும் சேர்ந்ததே பரதம் எனப்படு கிறது. பாரத தேசத்தில் முதன்முதலாக தோன்றியதால் பரதநாட்டியம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் பரத முனிவரால் முதன் முதலாக உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதால் இது பரத நாட்டியம் என்று அழைக்கப்படுகிறது.


செல்வி குருவாயூர் கார்த்தியாயினி,
பாபநாசம் சிவம் நாட்டிய விழா, சென்னை
சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சதீர் என்றும் சதீர்கச்சேரி என்றும் அழைக்கப்பட்ட நடனம் மறுமலர்ச்சி அடைந்து பரதநாட்டியமாக விளங்கி வருகிறது. பல்வேறு கலை அம்சங்களை முழுமையாக விளக்கும் ஒரு நூல் தான் பரதர் எழுதிய நாட்டிய சாஸ்திரமாகும்.

நாயன்மார்களில் நால்வர் என்ற புகழ் பெற்ற அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நான்கு அருஞ்செல்வர்களைப் போல இசை நடனமேதைகளான சின்னய்யா, பொன்னய்யா, சிவானந்தம், வடிவேலு என்ற இந்த நால்வரும் கலை உலகம் நமக்கு வழங்கிய நான்கு முத்துக்கள் எனலாம்.



இவர்களைப் பற்றி அடுத்த பதிப்பில் காண்போம்... 
..... தொடரும்....
பகிர்வு: 
செல்வன் தனேஷ் பாலகிருஷ்ணன்
தினகரன் நுண்கலை கல்விக்கழகம்,
மலேசியா திருநாடு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அகத்திணையின் களவு வாழ்க்கை கற்பியல் வாழ்க்கை என்னும் வரையறையின் பொருள் நோக்கம்...

உ லகியல் பண்பினைப் போற்றும் வகையில் தமிழ் இலக்கணம் அமைக்கப்பட்டுள்ளது என்னும் கூற்றினை மெய்ப்பிப்பதற்குக் காரணமாய்த் திகழ்வது பொருளிலக்கணமே ஆகும். பொருளிலக்கணத்தை அகம், புறம் என்று இரண்டாகப் பகுத்துத் தொல்காப்பியம் விளக்குகிறது. தொல்காப்பியரின் இவ்வகைப்பாடு பிற்கால இலக்கண நூல்களில் இரு வகை இலக்கணமாகத் தோற்றம் பெற்றது. இறையனார் அகப்பொருள், நம்பியகப் பொருள், மாறனகப் பொருள் என்று அகம் குறித்துரைக்கும் நூல்கள் எழலாயின. பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய நூல்கள் புறப்பொருளை விளக்குவனவாகும். இப்பகுப்பினை ஒட்டியே ஐந்திலக்கண நூல்கள், பின்னெழுந்த இலக்கண நூல்கள் பிரித்துரைக்கப்பட்டுள்ளன.தொல்காப்பியப் பொருளிலக்கணம் கூறும் அகப்பொருள் மரபினை வகைமை நோக்கில் ஆராய்ந்துரைக்கும் வண்ணம் இக்கட்டுரை அமைந்துள்ளது.   பொருளிலக்கணம் - அகத்திணை  பொருள் என்பதற்குத் தமிழில் பல பொருள் கொள்ளலாம். ஒரு பொருள்(Object) என்றும் செல்வம் (Wealth) என்றும் சொல்லுக்கான பொருள் விளக்கம் (synonyms) என்றும் மெய்ப்பொருள் என்றும் பல்வகை நிலையில் நின்று பொருள் கொள்ளலாம். பொருள் என்னும் சொல்லிற்குத் தமிழில் ம...

கற்பியல் பிரிவினை வகைப்படுத்திக் காட்டியிருக்கும் சங்க இலக்கியம்

களவு வாழ்க்கை நீண்ட நாட்களுக்கு தொடர முடியாததாகும். ஆக, சங்க இலக்கியங்களில் கற்பியல் பிரிவினை மிக தெளிவாக தொல்காப்பியத்தில் எடுத்துரைத்துரைக்கப்பட்டுள்ளன. திருமணத்திற்கு பின்பு தொடங்குவதே கற்பு வாழ்க்கையாகும். காதலித்துத் திருமணம் செய்யும் களவின் வழிக் கற்பும் மூத்தோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்யும் கற்பும் என இரு வகைகளாக வகுக்கின்றனர். கற்பு வாழ்வில் புணர்ச்சி என்பது பெற்றோரால் செய்து வைக்கப்பட்ட திருமணத்தில் கூடும் புணர்ச்சி, தலைவியின் ஊடலைத்தவிர்க்கும் வாயின் வழிக்கூடும் புணர்ச்சி என இருவகைப்படும்.களவின் வழிக்கூடிய தலைமகளை தலைமகன் தன் ஊருக்கு அழைத்துச்சென்று திருமணம் செய்து கொள்ளுதல் சூழலில் தலைமகளின் சுற்றத்தாரால் செய்து வைக்கும் திருமணமின்றி களவுவழிக் கற்பில் புணர்ச்சி நிகழ்ந்துவிடும். கற்பில் தலைவனுக்கு இருவகைப் புணர்ச்சிகள் நிகழும்.களவின் வந்த புணர்ச்சியும் களவின் வழி அல்லாமல் திருமணம் செய்துக்கூடும்புணர்ச்சியும் ஆகும். மேலே குறிப்பிட்ட இரு வகைப் புணர்ச்சிக்கும் காதல் பரத்தை, காமக்கிழத்தி, இர்ண்டாம் திருமணம் செய்து கொண்ட குல மகளிர் ஆகிய மூவரும் அடங்குவர். காதல் பரத்தை ம...

அகத்திணைப் பாடல்களுக்கென தனிச் சிறப்புகள், கூறுகள்

அ கத்திணை என்பது தமிழ் இலக்கியங்களிலேயே உயரிய பிரிவாகும். அக ஒழுக்கத்தைப் பற்றி விவரிக்கக்கூடியது அகத்திணையியலாகும். அகம் என்பதற்கு உள்ளம், உறவு, மறைவு என்ற பொருள்படும். நம் சங்கக் கால தமிழிலக்கியங்களில் காணப்படும் காதல் வாழ்வு, உலக மக்கட்கெல்லாம் உரிய காதல் நெறியாகும். அகத்திணைக்கல்வி என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் வழங்க வேண்டிய இன்றியமையாக் கல்வியாகும். தலைமக்கள் இருவர் தாமே எதிர்கொண்டு,காதல் கொண்டு பெறும் இன்பம், பிறருக்கு இன்னதென்று உணர்த்த முடியாததும் தாமே உணர்ந்து கொள்ளக்கூடியதும் அகமாகும். சங்க காலங்களில் நம் முன்னோர்கள் இல்லறவு வாழ்வு பூசலின்றி வாழ்ந்தனர் என்பதனை நம் அகத்திணைப் பாடல்களில் அறியலாம். அகத்திணை,புறத்திணைஎன பல ஒற்றுமை வேற்றுமைகள் கொண்டிருந்தாலும் புறத்திணையைக் காட்டிலும் அகத்திணை சிறபம்சங்கள் கொண்டதாக கருதப்படுவதாகநன்கு தெளிவாக விளங்குகிறது. புறத்திணைப் பாடல் அமைப்புகள் வீரம் மக்களுள் சிலருக்கே உரியதாகப் புலப்படுகிறது. “நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே”- [புறம்.312] அகத்திணைப் பாடல் பொருள் காமமோ காதலோ ஆண் பெண் என்ற பிரிவினைக் கொண்டே அஃறிணை உயர்திணை உயிர்க்கெல்லாம...