முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குரு ஶ்ரீமதி சந்தியா மனோஜ்; ஒடிஸி நடனம் ஒரு கண்ணோட்டம்.


கடந்த வாரம் சனிக்கிழமையன்று, நுண்கலை ஆலயத்தில் குரு ஶ்ரீமதி சந்தியா மனோஜ் அவர்கள் அரங்கேற்றிய 'தச மகா வித்யா' ஒடிஸி நடனம் இன்னும் என் மனதில் நீங்கமற நிறைந்துள்ளது.

சக்தி வழிபாடு இன்று உலகம் எங்கும் அதிகமாக உள்ளது. வீட்டிலும் நாட்டிலும் பெண்களின் பங்களிப்பும் ஆதிக்கமும் அதிமாகிக் கொண்டுள்ளது. கோயில்களில் கூட சக்தி வழிபாடு 'சாக்தம்' இன்று உயர்ந்த நிலையில் உள்ளது. சாக்த தத்துவத்தையும், பத்து வகையான சக்தி தெய்வங்களைப் பற்றியும், தன்னுடைய ஆடம் திறனால் அரங்கத்தையே மெய் மறக்கச் செய்தவர். 

இவரின் தனிச் சிறப்பு நிருத்தத்தில் உடலின் எல்லாப்பாகங்களும் அதாவது பாதம் வரை எல்லா உறுப்புகளும் அழகுற இயக்கி தசா மகா வித்யாவைக் கண்ணெதிரே சேர்த்தவரும் ஆவர்.


இக்கலை நாட்டியத்தின் ஒரு பெரும் பகுதியாக அமைந்துள்ளது. ஒடிஸி நாட்டியத்தில் நிருத்தம் நன்கு அறிந்து நன்கு அரங்கேற்றினார். ஶ்ரீமதி சந்தியா மனோஜ் தன்னுடைய நிருத்தம் பிரத்தியேக கருத்து ஒன்று வெளிப்படுத்தி தன் கலாரசனை வெளிப்படுத்தி அனைவராலும் சுலபமாக இரசிக்க வைத்து நீங்கமற பதித்து விட்டார். இந்நடனம் காண்பவர் மனதை கவர்வது மட்டுமில்லாமல், ஶ்ரீமதி சந்தியா மிக மென்மையான நிலைக்கு அழைத்துச் செல்லும் தன்மை வாய்ந்தவர். நடனத்தில் சிருங்கார ரசம் நிறைந்த காட்சிகளில் நிருத்தம் இன்றியமையாத ஒரு அம்சமாகும்.

தசம் என்றால் பத்து அதாவது திசைகள் எட்டு மேலும் கீழும் இரண்டு ஆக மொத்தம் பத்து. இந்தப் பேரண்டத்தில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் அதந் ஆக்கச் சக்தியும் பத்து விதமான நிலைகளில் இருக்கின்றது என்பதனைத் தன் ஆடல் வழியாக நன்கு தெளிவுபடுத்தினார்.


இவரின் ஆடல் கலை வழியாக இந்த பிரபஞ்சம் நம் உடல் என்று பொருள் கொண்டால் அந்தப் பத்து விதமான சக்தியும் நம் உடலிலும் இருக்கும் என்பதனை இந்த தச மகா வித்யா வழி கலை ஆர்வாலரிடம் சேர்ப்பித்துள்ளார்.

எல்லாம் வல்ல அம்பிகையின் அருளால் நின் கலைச் சேவை ஓங்கட்டும் குரு ஶ்ரீமதி சந்தியா மனோஜ். உங்களை வாழ்த்த வயதில்லை, வணங்க மனமுண்டு. நன்றி

என் பார்வையில்,

செல்வன் தனேஷ் பாலகிருஷ்ணன்
தினகரன் நுண்கலை கல்விக்கழகம்,
மலேசியா திருநாடு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்பியல் பிரிவினை வகைப்படுத்திக் காட்டியிருக்கும் சங்க இலக்கியம்

களவு வாழ்க்கை நீண்ட நாட்களுக்கு தொடர முடியாததாகும். ஆக, சங்க இலக்கியங்களில் கற்பியல் பிரிவினை மிக தெளிவாக தொல்காப்பியத்தில் எடுத்துரைத்துரைக்கப்பட்டுள்ளன. திருமணத்திற்கு பின்பு தொடங்குவதே கற்பு வாழ்க்கையாகும். காதலித்துத் திருமணம் செய்யும் களவின் வழிக் கற்பும் மூத்தோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்யும் கற்பும் என இரு வகைகளாக வகுக்கின்றனர். கற்பு வாழ்வில் புணர்ச்சி என்பது பெற்றோரால் செய்து வைக்கப்பட்ட திருமணத்தில் கூடும் புணர்ச்சி, தலைவியின் ஊடலைத்தவிர்க்கும் வாயின் வழிக்கூடும் புணர்ச்சி என இருவகைப்படும்.களவின் வழிக்கூடிய தலைமகளை தலைமகன் தன் ஊருக்கு அழைத்துச்சென்று திருமணம் செய்து கொள்ளுதல் சூழலில் தலைமகளின் சுற்றத்தாரால் செய்து வைக்கும் திருமணமின்றி களவுவழிக் கற்பில் புணர்ச்சி நிகழ்ந்துவிடும். கற்பில் தலைவனுக்கு இருவகைப் புணர்ச்சிகள் நிகழும்.களவின் வந்த புணர்ச்சியும் களவின் வழி அல்லாமல் திருமணம் செய்துக்கூடும்புணர்ச்சியும் ஆகும். மேலே குறிப்பிட்ட இரு வகைப் புணர்ச்சிக்கும் காதல் பரத்தை, காமக்கிழத்தி, இர்ண்டாம் திருமணம் செய்து கொண்ட குல மகளிர் ஆகிய மூவரும் அடங்குவர். காதல் பரத்தை ம

அகத்திணையின் களவு வாழ்க்கை கற்பியல் வாழ்க்கை என்னும் வரையறையின் பொருள் நோக்கம்...

உ லகியல் பண்பினைப் போற்றும் வகையில் தமிழ் இலக்கணம் அமைக்கப்பட்டுள்ளது என்னும் கூற்றினை மெய்ப்பிப்பதற்குக் காரணமாய்த் திகழ்வது பொருளிலக்கணமே ஆகும். பொருளிலக்கணத்தை அகம், புறம் என்று இரண்டாகப் பகுத்துத் தொல்காப்பியம் விளக்குகிறது. தொல்காப்பியரின் இவ்வகைப்பாடு பிற்கால இலக்கண நூல்களில் இரு வகை இலக்கணமாகத் தோற்றம் பெற்றது. இறையனார் அகப்பொருள், நம்பியகப் பொருள், மாறனகப் பொருள் என்று அகம் குறித்துரைக்கும் நூல்கள் எழலாயின. பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய நூல்கள் புறப்பொருளை விளக்குவனவாகும். இப்பகுப்பினை ஒட்டியே ஐந்திலக்கண நூல்கள், பின்னெழுந்த இலக்கண நூல்கள் பிரித்துரைக்கப்பட்டுள்ளன.தொல்காப்பியப் பொருளிலக்கணம் கூறும் அகப்பொருள் மரபினை வகைமை நோக்கில் ஆராய்ந்துரைக்கும் வண்ணம் இக்கட்டுரை அமைந்துள்ளது.   பொருளிலக்கணம் - அகத்திணை  பொருள் என்பதற்குத் தமிழில் பல பொருள் கொள்ளலாம். ஒரு பொருள்(Object) என்றும் செல்வம் (Wealth) என்றும் சொல்லுக்கான பொருள் விளக்கம் (synonyms) என்றும் மெய்ப்பொருள் என்றும் பல்வகை நிலையில் நின்று பொருள் கொள்ளலாம். பொருள் என்னும் சொல்லிற்குத் தமிழில் முப்பத்திரண்டு

அகத்திணைப் பாடல்கள்வழி அன்றைய வாழ்வியல் கூறுகள்

முன்னுரை :  'தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவனுக்கொரு குணமுண்டு' என்று கூறும் நாமக்கல் கவிஞர் வரிகளில் உள்ள உண்மைத் தன்மை அகிலத்தோரால் போற்றப்படுகிறது. இதனையே தமிழ் இலக்கியங்களும் கூறுகிறது. சிற்பம், கட்டிடக்கலை, போர், இசை, கனிமவளம், மருத்துவம் என அனைத்திற்கும் முன்னோடியாகத் திகழ்பவன் தமிழன். அதற்குமட்டுமல்ல பலமணம் செய்து கொண்டு திருமணம் என்று அவ்வுறவைக் கொச்சைப் படுத்தும் மனிதர்களுக்கிடையே ஒருவனுக்கு ஒருத்தி என்னும் உன்னத கோட்பாட்டோடு வாழ்ந்து குடும்ப வாழ்வியலுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறான் அதனையே சங்க இலக்கிய நூல்களும் இயம்புகின்றன. இல்லற வாழ்வியலை அகத்திணை என்று பெயரிட்டு அதற்கென இலக்கணங்களையும் வகுத்துள்ளான். அதைக் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.  அகத்திணை : நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையையே சங்க இலக்கியங்கள் இயம்புகின்றன. பண்டையக் காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியலை தமிழ் இலக்கியங்கள் அகவாழ்வு, புறவாழ்வு என இரண்டு வகையாக வகுத்துள்ளது. இதில் புறவாழ்வு என்பது தலைவன் மேற்கொள்ளும் போர் சிறப்பு பற்றியதாகும். ஆனால் அகவாழ்வு என்பது ஓர் ஆணும் பெண்ணும் கண்களால் காதல