முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கருவறையையும், தாய்மையும் கொச்சைப்படுத்தியவர்களுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது! மன்னிப்பு……… மனிதர்களுக்கு மட்டும் தான்! (எழுத்தாளர் கே.எஸ்.செண்பகவள்ளி}



எழுத்தாளர் என்பவர் யார்? எழுத்தை ஆள்பவர்கள்; செதுக்குபவர்கள்; செம்மைப்படுத்துபவர்கள்! எழுத்தாளர்களுக்கு எழுத்து சுதந்திரம் உண்டு. எந்தக் கருத்தை வேண்டுமானாலும் சொல்லலாம்; உணர்வுகளையும் விவரிக்கலாம். பாகுப்படுத்தலாம்! 


ஆனால், எழுத்துகளில் அத்துமீறல்கள் தவிர்க்கப்பட வேண்டும். “கழிவறையும் ; பழிவாங்கும் வழிமுறையும்” கதை என்ற பெயரில் ஒட்டு மொத்தப் பெண்களையும்; பெற்றத் தாய்; பெண் தெய்வம் உட்பட அனைவரையும் கொச்சைப்படுத்தி மலேசியத் தமிழ்ச் சமுதாயத்தைத் தலைக்குனிய வைத்த படைப்பாளனை நினைத்து கூனி குறுகி நிற்கிறேன். வள்ளுவர் சொன்னார், ஆண்டாள் சொன்னார் என்றெல்லாம் ஏக வசனத்தில் பேசுவது சிறந்த படைப்பாளருக்கு அழகில்லை! தமிழை விட தொன்மையான, அழகான மொழி ஏதுமில்லை. கொஞ்சைப் படுத்தாமல், மாசுப்படுத்தாமல் எழுதுவதுதான் தாய்த் தமிழுக்கு நாம் செய்யும் மரியாதை...! தாயையே கொஞ்சைப்படுத்துபவர்களிடம் இதை எல்லாம் எதிர்ப்பார்க்க முடியாதுதான்! 

இந்த நூற்றாண்டில், நவீன யுகத்தில் ஒழுக்கமாக வாழ வேண்டும்; நாகரீகமாக வாழ வேண்டும் என்பதற்காகதான் வள்ளுவர் 5000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்து விட்டார். வள்ளுவரின் காமத்துப்பாலை படிக்கும் எல்லோருக்குமே சட்டென்று அதன் பொருள் விளங்கி விடாது. தொன்மையான தமிழில் அழகாக செதுக்கப்பட்ட உலக மறை. ஆனால், புத்திலக்கியம் என்ற பெயரில் புனையப்பட்ட (புணரப்பட்ட) இந்தக் கதையைப் பத்து வயது பாலகன் படித்தாலும் புரிந்து கொள்ள முடியும்! சிந்தனையை விரிவாக்க வேண்டும் ; படைப்பிலக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என்றெல்லாம் கங்கணம் கட்டுவது இது போன்ற படைப்புகளுக்குதான் என்பதை நினைக்கும் போது… மனம் பதறுகின்றது! மலேசிய நவீன இலக்கிய உலகம் எங்கே போகிறது? வளர்ந்து வரும் இளையதலைமுறை படைப்பாளர்களின் சிந்தனைத் திறனை திசை திருப்ப இத்தகைய படைப்புகள் அடித்தளமிடுகிறதா? இதுதான் சிந்தனை மாற்றமா? வளர்ச்சியா?

ஒரு மஞ்சள் பத்திரிகையை விட மோசமான படைப்பான, “கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்” ; தாய்மை என்பது புனிதமா? என்று “கருவறைகளை”ப் மாசுப்படுத்தியது தாய்மைக்கே இழுக்கு! தாயைப் புணர்தல்; காளியம்மனைப் புணர்ச்சிக்கு அழைப்பது போன்ற வசனங்கள் எழுதும் போது அவர் தாய், சகோதரிகளை நினைத்து பார்க்கத் தவறியது ஏனோ? கதை என்ற பெயரில் “கருமங்களை” எழுதி கர்மாவைத் தேடிக் கொள்ளாதீர்கள்!

மலேசியப் பெண் படைப்பாளர் என்ற ரீதியில் முழுமனதாக எனது கண்டனத்தை வெளிப்படுத்துகிறேன்!. மாசுப்படுத்தி விட்டு மன்னிப்புக் கேட்பது….? மன்னிப்பது மனிதர் மரபு; கருவறையையும், தாய்மையும் கொச்சைப்படுத்தியவர்களுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது! மன்னிப்பு……… மனிதர்களுக்கு மட்டும் தான்!



பகிர்வு,
தனேஷ்@தினகரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்பியல் பிரிவினை வகைப்படுத்திக் காட்டியிருக்கும் சங்க இலக்கியம்

களவு வாழ்க்கை நீண்ட நாட்களுக்கு தொடர முடியாததாகும். ஆக, சங்க இலக்கியங்களில் கற்பியல் பிரிவினை மிக தெளிவாக தொல்காப்பியத்தில் எடுத்துரைத்துரைக்கப்பட்டுள்ளன. திருமணத்திற்கு பின்பு தொடங்குவதே கற்பு வாழ்க்கையாகும். காதலித்துத் திருமணம் செய்யும் களவின் வழிக் கற்பும் மூத்தோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்யும் கற்பும் என இரு வகைகளாக வகுக்கின்றனர். கற்பு வாழ்வில் புணர்ச்சி என்பது பெற்றோரால் செய்து வைக்கப்பட்ட திருமணத்தில் கூடும் புணர்ச்சி, தலைவியின் ஊடலைத்தவிர்க்கும் வாயின் வழிக்கூடும் புணர்ச்சி என இருவகைப்படும்.களவின் வழிக்கூடிய தலைமகளை தலைமகன் தன் ஊருக்கு அழைத்துச்சென்று திருமணம் செய்து கொள்ளுதல் சூழலில் தலைமகளின் சுற்றத்தாரால் செய்து வைக்கும் திருமணமின்றி களவுவழிக் கற்பில் புணர்ச்சி நிகழ்ந்துவிடும். கற்பில் தலைவனுக்கு இருவகைப் புணர்ச்சிகள் நிகழும்.களவின் வந்த புணர்ச்சியும் களவின் வழி அல்லாமல் திருமணம் செய்துக்கூடும்புணர்ச்சியும் ஆகும். மேலே குறிப்பிட்ட இரு வகைப் புணர்ச்சிக்கும் காதல் பரத்தை, காமக்கிழத்தி, இர்ண்டாம் திருமணம் செய்து கொண்ட குல மகளிர் ஆகிய மூவரும் அடங்குவர். காதல் பரத்தை ம

அகத்திணையின் களவு வாழ்க்கை கற்பியல் வாழ்க்கை என்னும் வரையறையின் பொருள் நோக்கம்...

உ லகியல் பண்பினைப் போற்றும் வகையில் தமிழ் இலக்கணம் அமைக்கப்பட்டுள்ளது என்னும் கூற்றினை மெய்ப்பிப்பதற்குக் காரணமாய்த் திகழ்வது பொருளிலக்கணமே ஆகும். பொருளிலக்கணத்தை அகம், புறம் என்று இரண்டாகப் பகுத்துத் தொல்காப்பியம் விளக்குகிறது. தொல்காப்பியரின் இவ்வகைப்பாடு பிற்கால இலக்கண நூல்களில் இரு வகை இலக்கணமாகத் தோற்றம் பெற்றது. இறையனார் அகப்பொருள், நம்பியகப் பொருள், மாறனகப் பொருள் என்று அகம் குறித்துரைக்கும் நூல்கள் எழலாயின. பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய நூல்கள் புறப்பொருளை விளக்குவனவாகும். இப்பகுப்பினை ஒட்டியே ஐந்திலக்கண நூல்கள், பின்னெழுந்த இலக்கண நூல்கள் பிரித்துரைக்கப்பட்டுள்ளன.தொல்காப்பியப் பொருளிலக்கணம் கூறும் அகப்பொருள் மரபினை வகைமை நோக்கில் ஆராய்ந்துரைக்கும் வண்ணம் இக்கட்டுரை அமைந்துள்ளது.   பொருளிலக்கணம் - அகத்திணை  பொருள் என்பதற்குத் தமிழில் பல பொருள் கொள்ளலாம். ஒரு பொருள்(Object) என்றும் செல்வம் (Wealth) என்றும் சொல்லுக்கான பொருள் விளக்கம் (synonyms) என்றும் மெய்ப்பொருள் என்றும் பல்வகை நிலையில் நின்று பொருள் கொள்ளலாம். பொருள் என்னும் சொல்லிற்குத் தமிழில் முப்பத்திரண்டு

அகத்திணைப் பாடல்கள்வழி அன்றைய வாழ்வியல் கூறுகள்

முன்னுரை :  'தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவனுக்கொரு குணமுண்டு' என்று கூறும் நாமக்கல் கவிஞர் வரிகளில் உள்ள உண்மைத் தன்மை அகிலத்தோரால் போற்றப்படுகிறது. இதனையே தமிழ் இலக்கியங்களும் கூறுகிறது. சிற்பம், கட்டிடக்கலை, போர், இசை, கனிமவளம், மருத்துவம் என அனைத்திற்கும் முன்னோடியாகத் திகழ்பவன் தமிழன். அதற்குமட்டுமல்ல பலமணம் செய்து கொண்டு திருமணம் என்று அவ்வுறவைக் கொச்சைப் படுத்தும் மனிதர்களுக்கிடையே ஒருவனுக்கு ஒருத்தி என்னும் உன்னத கோட்பாட்டோடு வாழ்ந்து குடும்ப வாழ்வியலுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறான் அதனையே சங்க இலக்கிய நூல்களும் இயம்புகின்றன. இல்லற வாழ்வியலை அகத்திணை என்று பெயரிட்டு அதற்கென இலக்கணங்களையும் வகுத்துள்ளான். அதைக் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.  அகத்திணை : நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையையே சங்க இலக்கியங்கள் இயம்புகின்றன. பண்டையக் காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியலை தமிழ் இலக்கியங்கள் அகவாழ்வு, புறவாழ்வு என இரண்டு வகையாக வகுத்துள்ளது. இதில் புறவாழ்வு என்பது தலைவன் மேற்கொள்ளும் போர் சிறப்பு பற்றியதாகும். ஆனால் அகவாழ்வு என்பது ஓர் ஆணும் பெண்ணும் கண்களால் காதல