2004 ஆண்டு நடந்த ஆழி பேரலையின் BBC செய்தியை பார்த்தப்பின் என் மனதை உருத்தியக் காட்சியினைக் கதையாக்கம் செய்து நான் பேரவைக் கதைக்கு எழுதியச் சிறுகதையாகும். கருத்துகள் இருப்பின் கதையின் இறுதியில் தட்டச்சுச் செய்யவும். நன்றி “அம்மா.... அம்மா ... இந்த அவலையின் நிலைமையைப் பார்த்தாயாமா. என்னை வளர்த்த தாயே, என்னை பெற்றெடுத்த தாயைக் கூட நான் பார்த்ததில்லை”. “உன்னையே பார்த்து பார்த்து வளர்ந்தேன்.... உன்னையே நம்பி வாழ்ந்தேன்; வாழ்றேன். அடுத்த வார உன் பேத்திக்கு அதான் நம்ம பொன்னுதாயிக்கு கல்யாணம்”. கம்பீரமா சொன்ன சொக்கலிங்கம் கடலையே வெறித்து பார்க்கிறான். “தாயே உன்கிட்ட சொல்லமா நான் யாருக்கிட்டம்மா போய் பொலம்புவேன். ஒன்னதான் தாயீ நான் நம்பிக்கிட்டு இருக்கேன்”. “மாமா... மாமா... இந்த மனுசன் எங்கதான் போய் தொலைந்தாருன்னே தெரியலையே?” “இந்த மனுசனுக்குப் பைத்தியம் ஏதோ புடிச்சிருச்சா இந்த நேரத்துல கடலை பார்த்து ஒக்காத்திருக்காரு”. மறுபடியும் குருவம்மா “யோ... மனுசா அங்க அப்படி என்னத்தேயா பார்த்துக்கிட்டு இருக்க, வாயா என் கையாலே ஒனக்கு பிடிக்கும்னே வஞ்சனை மீன் கறிக் குழம்பு வைச்சிருக்கேன் வந்து ஒரு கை...