சில ஆண்டுகள் முன்பு என் மனதை உருத்திக்கொண்டிருந்த ஒரு உண்மை கதையினையொட்டி நான் பேரவைக் கதைக்கு எழுதியச் சிறுகதையாகும். கருத்துகள் இருப்பின் கதையின் இறுதியில் தட்டச்சுச் செய்யவும். நன்றி
“அர்வின்... அர்வின்....” அம்மா அழைக்கும் குரல். மௌனமாக ஏதோ ஒன்று சிந்தித்தவாறு கண்ணயட்கிறான் அர்வின்.
“டேய் மச்சா... இன்னிக்கு நாம் சந்திக்கிற கடைசிநாள். டேய் என்னடா பார்க்கற?
இன்னையோடு நம்ம கல்லூரி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி டா..அப்பாடா இனி உன் தொல்லை எனக்கு இல்லை!!!
“ம்ம்ம்ம்...... நாலு வருசம்டா... எவ்வளவு சீக்கிரம் முடிஞ்சிருச்சுப் பாரு. எப்படியோ படிப்பை முடிச்சிட்டோம். இனிமேல வேலையைத் தேடனும்.” என்றான் மதன்.
அர்வின் மதன் கூறும் எந்த விசயமும் காதில் விழாதவாறு மதனின் செய்கையையும் அவனின் புன்னகையும் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தான். அவனின் மனம் ஏதோ வருடுகிறது.
“டேய் அர்வின் நீ எப்படா ஈப்போவுக்கு போறே”......
அப்பொழுது கூட அர்வின் வாயைத் திறக்காமல் அமைதியின் சொரூபமாக நின்று கொண்டிருந்தான். அவன் மனதில் ஏதோ ஒரு தேடல். என்றுமே இல்லாத தவிப்பு.
கல்லூரி வாழ்க்கை விட்டு அவரவர் ஊருக்குப் பிரிந்து சென்றனர். அன்ரு முதல் அர்வின் தனிமையில் மனம் வாடுகிறான்.
“டேய் அர்வின் கூப்பிடுறது காது கேக்கலையா?” அம்மா கேட்க.. திடுக்கென எழுந்தான் அர்வின். “டேய் என்னடா ஆச்சு உனக்கு? கல்லூரி படிப்பு முடிச்சு ஆறு மாச ஆயிருச்சு இப்படியே பேய் அறைந்த மாதிரி உட்காந்திருக்கே.. எழுந்திருடா கண்ணா.....!”. அம்மா கூறுவதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் ஏதோ ஒன்றுமே தெரியாதது போல் இவன் நினைப்பு எல்லாம் மதன் மேல்தான்.
அம்மா அர்வின் தலையை தன் மடியில் கிடத்தி அவனுடைய
தலையை கோதிவிட்டாள். அவனறியாமல் கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் சிந்தின, இதைக் கண்ட தாய் மனம்.....
“அர்வின் என்ன இது சின்னப் பிள்ளைத்தனமா அழுவுற... என்னடா உனக்கு
பிரச்சனை அம்மாகிட்ட சொல்லு”..
அர்வின் மனதுகுள்ளே கடலலையைவிட வேகமாக அடிக்கிறது அவன் எண்ண அலைகள்.
அர்வின் வீட்டில் ஒரே பிள்ளை. சிறுவயதிலிருந்தே தனியே வாழ்ந்தான். செல்லமாக வளர்ந்தவன், இருப்பினும் அவன் மனதில் சிறுவயதிலிருந்தே ஒரு தனி ஏக்கம். அந்த ஏக்கம் தான் என்னவென்று தெரியாமலே வளர்ந்து வந்தான். அவன் பள்ளிப் பருவத்தில் யாரிடமும் சரியாகப் பழகமாட்டான்; பேசவும் மாட்டான். இதற்கு காரணம் அவன் மிக மென்மையான உடல் வலிமை கொண்டவன். குணத்திலும் மென்மையானவன். இதனாலே அவனைப் பள்ளியில் அனைவரும் கேலி செய்வார்கள். இதனைத் தவிர்ப்பதற்காகவே அவன் யாரிடமும் பேசமாட்டான்; பழவதுமில்லை. பள்ளி வாழ்க்கை முடிந்து கல்லூரி வாழ்க்கை அவன் வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அவனின் உள் தேடலுக்கு ஒரு சுகமான தீர்வு வந்தது. அந்தச் சுகமான தீர்வு மதன்.
மதன் முதலில் அர்வினுக்கு அவனின் அறை நண்பனாகதான் அறிமுகம். அந்த அறிமுகமே அவர்களின் உறவிற்கு அடித்தளம் அமைத்தது. மதன் அர்வின் மேல் காட்டிய அன்பு அரவணைப்பு அவனின் மனம் நெகிழ வைத்தது. அர்வின் மதனைத் தவிர யாரிடமும் அவன் பழகுவதில்லை. அவனின் சந்தோசம் அந்த நான்கு சுவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.
இதுநாள் வரை பெற்றோர்கள் விட அதிகம் பாசம் காட்டினான் மதன். அர்வினின் உடல்நலம் சரியில்லையென்றாலும் எந்நேரமும் அவன் பக்கத்திலிருந்து பார்த்துக்கொண்டான்.
பத்தொன்பது ஆண்டு தனித்திருந்த அர்வினுக்கு மதனே ஒரு நிவாரணம். அந்த நான்காண்டுகளில் அர்வின் மதனை விட்டு பிரிந்ததே இல்லை. அப்படியொரு நெருக்கம். இன்று அவனின்றி உலகமே எதிராகிறது அர்வினுக்கு.
அம்மா “அய்யா வாயா வந்து சாப்பிடுடா, அம்மா ஊட்டி விடுறேன். அர்வினும் அம்மாவின் சொல் காதில் கேளாதவாறு வெகுட்டென எழுந்து தன் அறைக்கு நடக்கலானான்.
அறையில் தனியே அயர்ந்து யோசிக்கலானான். மனதில் உள்ளதை யாரிடமாவது கூறி விட வேண்டும் என ஓர் ஏக்கம். ஆனால் ஓர் உறுத்தல்.
ஓரினக் காதலை ஏற்குமா இந்தச் சமுதாயம்... அல்லது என் பெற்றோர்கள்தான் ஏற்பார்களா? மேற்கத்திய நாடுகளில் சுதந்திரமாக ஒரு ஆண் இன்னொரு ஆணோடு சேர்ந்தால் அந்தச் சமுதாயம் ஏற்கும். அங்கு இவர்கள் ஒன்றிணைந்து வாழ்கின்றனர்.
எனக்கு இம்மாதிரியான எண்ணத்தை என் மனதில் தோன்ற வைத்தது யார் குற்றம்? நானா? இல்லை என்னைப் படைத்த அந்தக் கடவுள் குற்றமா.
இதெல்லாம் இருக்கட்டும் மதன் என்னை ஏற்பானா? அவன் மனதில் என்ன இருக்கிறது? அர்வினின் மனதில் மூன்றாம் உலகப் போரே நடந்தது.
அவன் மனதில் கீதாசாரம் ஒலித்துக் கொண்டிருந்தது,......
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ அது நன்றாக நடக்கிறது
எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கும்.
யோசித்தான்; முடிவெடுத்தான். வாழ்ந்தால் மதனோடு இல்லையேல் மரணத்தோடு.
நினைத்த அடுத்தக் கணமே மதனிடமிருந்து ஒரு தொலைப்பேசி அழைப்பு.
“டேய் மச்சான் எப்படிடா இருக்க”.
பதிலுக்கு அர்வின் புன்னகைத்தவாறு “நல்லா இரிக்கேண்டா. நீ எப்படி இருக்க” முடிப்பதற்குள் அர்வினுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
“மச்சான் எனக்கு ஈப்போ கார்டேன்ல வேலை கிடைச்சிருக்கு. நாளைக்கே நான் அங்கே வாரேண்டா. உன்கிட்ட நான் மனசுவிட்டு பேசனு... முடிப்பதற்குள் அழைப்பு துண்டித்தது.
“ஐயோ..... மதன் என்னமோ பேசனும்னே சொன்னானே? என்னவா இருக்கும்?”
யோசிக்க ஆரம்பித்தான். மதன் சொல்லப் போகும் விசயத்தை என்னாவா இருக்கும் பல கற்பனைகள் ஓட்டினான். அடோய்.... எத்தனை மணிக்கு வரேன்னு சொல்லவே இல்லையே...
ம்ம்ம்ம்... மதனுக்கு இராத்திரி பஸ் எடுக்க பிடிக்கும். கண்டிப்பா இன்னிக்கே அவன் பஸ் எடுப்பான். அப்ப நான் இப்பவே போறேன்.
உடனே அர்வின் “அம்மா நான் வெளியே போயிட்டு நாளைக்குதான் வருவேன் சொல்லிட்டு அம்மா சரி என்று கூறுவதற்குள் கிளம்பிட்டான்.
அர்வின் பல கனவுகளோடு பஸ் நிறுத்தத்தில் காத்து கொண்டிருந்தான். மதனின் சிந்தனையோடு அவன் காத்திருந்தான்.
மதன் வந்து இறங்கியதுதான் தாமதம். அர்வின் அந்த பஸ் நிறுத்தத்திலே அவனைக் கட்டி தழுவி உதட்டோடு உதடு முத்தம் கொடுத்ததை பார்த்த அர்வின் அப்பா அவ்விடத்திலே திடுக்கிட்டு இருதய வலியால் அவதிப்பட்டு இறந்தார். பெற்று வளர்த்த மகனின் செயலைக் கண்டு தாங்காமல் உயிரைத் துறந்தார்.
“அய்யோ... யாரோ ஒரு பெரிய மனுசன் மயங்கி விழுந்துட்டாரு... வாங்க அவரைத் தூக்குங்க.”
நடந்ததை எதுவும் பாராமால் யாரேன்று கேட்காமல் அவ்விடத்தை விட்டு அகன்றான் அர்வின்-மதன்.
கருத்துகள்
கருத்துரையிடுக