ம.நவீன் அவர்களின் எழுத்தாக்கம் "கடக்க முடியாத காலம்". |
மலேசிய நாட்டு இளம் எழுத்தாளரான அண்ணன் ம.நவீன்(Navin Manogaram) எழுத்தை நுகர்ந்தேன். "கடக்க முடியாத காலம்". ஒவ்வொரு இளம் எழுத்தாளரும் வாசிக்க வேண்டிய நூல். குறிப்பாக என்னை போன்ற வளரும் எழுத்தாளர்கள் வாசிக்க வேண்டிய ஒரு நூல், சில சந்தர்ப்ப சூழ்நிலையினால் இன்று நான் சிறுகதை, கவிதை, கட்டுரை எழுதுவதிலிருந்து விடுப்பட்டிருந்தேன். என்னால் இயன்ற சில மன உணர்வுகளை கதை வடிவாகவும், கவிதை வடிவாகவும் கிறுக்கீனேன். அவை வெறும் கிறுக்கலாகவே என் பெட்டியில் தூங்குகிறது. அவ்வப்போது மனம் சோர்வடையும் போது எடுத்து வாசித்துக் கொள்வேன். பல இடங்களில் பிரசுரிக்க அனுப்பியுள்ளேன், எதிலும் பிரசுரித்ததில்லை; காரணமும் தெரியவில்லை. ஏதேனும் குறைகள் இருப்பின் சுட்டிக்காட்டிருந்தால் திருத்தியிருப்பேனே. வாய்ப்பளிக்கவில்லை.... என் சிந்தனையை இலக்கியத்தில் விட்டு வெளியேற்றினேன். MA.இளஞ்செல்வன் போன்ற நல்லுள்ளங்கள் வழிக்காட்டிருந்தால் நானும் இன்று நல்லதொரு இலக்கியவாதியாகவும், எழுத்தாளனாகவும் வளர்ந்திருப்பேன். இலக்கியம் என் வேலை இல்லை எனக் கருதியே நான் சற்று விலகி வாழ்கிறேன்... அன்பு கரங்கள் கிடைக்குமா??????
கருத்துகள்
கருத்துரையிடுக