மீண்டும் என்னை எழுதத் தூண்டியப் புத்தகம். |
அண்ணன் ம.நவீன் எழுத்துகளில் மூழ்கும் போது, எனக்குள் இருக்கும் இந்த எழுத்துத் திறமையை முதல் முதலில் எனக்கே சுட்டிக்காட்டி என்னை ஒரு சிறுகதைப்போட்டியில் எழுத வைத்த அண்ணன் பாலமுருகன் அவ்ர்கள் என் நினைவில் வருகிறார்.
நன்கு நினைவில் பதிந்த ஒரு காட்சி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் அண்ணன் பாலமுருகன் நன்கு பரிட்சயமானதால் அவ்வப்போது என் அறைக்கு வருவார், இலக்கியக் கருத்துகளைப் பேசுவார், அதே நேரத்தில் அவர் எழுதிய சிறுகதைகளை வாசிப்பதற்காக என்னிடம் வழங்கியுள்ளார். என்னிடம் அவர் ஏன் இதனை எல்லாம் கொடுக்கிறார் என்பதனை என் சிற்றறிவுக்கு எட்டவில்லை அந்த நேரத்தில். ஆனால், என்னிடம் மொழி மட்டுமில்லை சமயச் சார்ந்த விசயங்களையும் கலந்துரையாடுவார். அவ்வப்போது "தனேஷ், நீங்களும் எழுதலாமே, முயற்சித்துப் பாருங்களேன்" என்பார். மனதிற்குள்ளே நான் முணுமுணுத்துக் கொண்டு, இவருக்கு வேலையே இல்லையா என்ற நினைப்பு வந்ததுண்டு. இருப்பினும், அவரிடம் "பிறகு பார்ப்போம்" என்பேன்".
அவர் அவ்வப்போது என்னை தூண்டியதில் என மனதில் ஒரு உண்மைச் சம்பவம் உருவெடுத்து ஓடும். அதை எழுத்தாக அமைக்க ஆசைப்பட்டேன். எடுத்தேன் எழுதுகோலை, எழுத ஆரம்பித்தேன். அதுவே என் வாழ்க்கையில் நான் எழுதிய முதல் சிறுகதையாகும். 'கலியுகக் காதலா???'. வெற்றிக்கரமாக எழுதி முடித்தேன். எழுதிய அனுபவமில்லாததால் சற்று அதிகமாகவே தடுமாறினேன். எழுதியதைக் கொடுத்தேன் வாசிப்பதற்காக அண்ணன் பாலமுருகனிடம். அவர் கூறிய வார்த்தைகள் இன்னும் என் மனதில் ஆழமாகப் பதிந்தது. "தனேஷ் உனக்கு திறமை இருக்கு, இருப்பினும் நிறைய கதைகளை வாசி, சிறுகதையின் நடையைப் புரிந்து கொள். உன்னாலும் முடியும்" என்றார்.
அவர் சொன்ன வார்த்தையினாலே நான் இன்னும் அதிகமாக வாசிக்க ஆரம்பித்தேன். ஜெயகாந்தனின் சிற்பங்களை ஆழமாக வாசிக்க ஆரம்பித்தேன். சில நுணுக்கங்களைப் புரிந்து கொண்டேன். என்னுள் இருந்த ஆற்றலைத் தட்டிய எழுப்பின ஜெயகாந்தனின் சுவடிகள், புதுமைப்பித்தனின் எழுத்துகள், பா.அ.சிவம் எழுத்துகள், ம.நவீன் எழுத்துகள் மற்றும் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஐயா கம்பார் கனிமொழி அவர்களின் எழுத்து.
இன்றும் வாசிக்கின்றேன், வாசிப்பேன், வாசித்துக் கொண்டிருப்பேன்.
வாசி,நாளுமறிய வாசி,அவன் உன்னைவாசிப்பதற்கு முன்!
இங்ஙன்,
தனேஷ்@இளந்தமிழ்
வாழ்த்துகள் நண்பா....
பதிலளிநீக்கு