முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குரலற்றவர்களின் குரலோவியம்

எழுத்து உலகத்தில் என் போன்ற வளரும் எழுத்தாளர்களை வளர்க்க எவரும் முன் வருவதில்லை என்பது எனது அனுபவப்பூர்வமான கருத்தாகும். அண்ணன் பாலமுருகன் அவர்களால் தூண்டப்பட்டும் இன்று எழுத்துலகத்தில் காலடி வைத்துள்ளேன். சமீப காலமாக எனக்கும் இவ்வுலகத்திற்கும் சிறு இடைவெளியை வைத்து நான் ஒதுங்கியிருந்தேன். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் என் போன்றவர்கள் தங்களின் கிறுக்கல்களை மக்களிடம் சேர்க்கச் சிரமம் கொள்கின்றனர். அதனை கருத்தில் கொண்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சியை உங்கள் கைகளில் தவழவிடுகிறேன். திருத்திக்கொள்கிறேன்,பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டும் போது. நன்றி

இப்படிக்கு,

தனேஷ் 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அகத்திணையின் களவு வாழ்க்கை கற்பியல் வாழ்க்கை என்னும் வரையறையின் பொருள் நோக்கம்...

உ லகியல் பண்பினைப் போற்றும் வகையில் தமிழ் இலக்கணம் அமைக்கப்பட்டுள்ளது என்னும் கூற்றினை மெய்ப்பிப்பதற்குக் காரணமாய்த் திகழ்வது பொருளிலக்கணமே ஆகும். பொருளிலக்கணத்தை அகம், புறம் என்று இரண்டாகப் பகுத்துத் தொல்காப்பியம் விளக்குகிறது. தொல்காப்பியரின் இவ்வகைப்பாடு பிற்கால இலக்கண நூல்களில் இரு வகை இலக்கணமாகத் தோற்றம் பெற்றது. இறையனார் அகப்பொருள், நம்பியகப் பொருள், மாறனகப் பொருள் என்று அகம் குறித்துரைக்கும் நூல்கள் எழலாயின. பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய நூல்கள் புறப்பொருளை விளக்குவனவாகும். இப்பகுப்பினை ஒட்டியே ஐந்திலக்கண நூல்கள், பின்னெழுந்த இலக்கண நூல்கள் பிரித்துரைக்கப்பட்டுள்ளன.தொல்காப்பியப் பொருளிலக்கணம் கூறும் அகப்பொருள் மரபினை வகைமை நோக்கில் ஆராய்ந்துரைக்கும் வண்ணம் இக்கட்டுரை அமைந்துள்ளது.   பொருளிலக்கணம் - அகத்திணை  பொருள் என்பதற்குத் தமிழில் பல பொருள் கொள்ளலாம். ஒரு பொருள்(Object) என்றும் செல்வம் (Wealth) என்றும் சொல்லுக்கான பொருள் விளக்கம் (synonyms) என்றும் மெய்ப்பொருள் என்றும் பல்வகை நிலையில் நின்று பொருள் கொள்ளலாம். பொருள் என்னும் சொல்லிற்குத் தமிழில் ம...

கற்பியல் பிரிவினை வகைப்படுத்திக் காட்டியிருக்கும் சங்க இலக்கியம்

களவு வாழ்க்கை நீண்ட நாட்களுக்கு தொடர முடியாததாகும். ஆக, சங்க இலக்கியங்களில் கற்பியல் பிரிவினை மிக தெளிவாக தொல்காப்பியத்தில் எடுத்துரைத்துரைக்கப்பட்டுள்ளன. திருமணத்திற்கு பின்பு தொடங்குவதே கற்பு வாழ்க்கையாகும். காதலித்துத் திருமணம் செய்யும் களவின் வழிக் கற்பும் மூத்தோரால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்யும் கற்பும் என இரு வகைகளாக வகுக்கின்றனர். கற்பு வாழ்வில் புணர்ச்சி என்பது பெற்றோரால் செய்து வைக்கப்பட்ட திருமணத்தில் கூடும் புணர்ச்சி, தலைவியின் ஊடலைத்தவிர்க்கும் வாயின் வழிக்கூடும் புணர்ச்சி என இருவகைப்படும்.களவின் வழிக்கூடிய தலைமகளை தலைமகன் தன் ஊருக்கு அழைத்துச்சென்று திருமணம் செய்து கொள்ளுதல் சூழலில் தலைமகளின் சுற்றத்தாரால் செய்து வைக்கும் திருமணமின்றி களவுவழிக் கற்பில் புணர்ச்சி நிகழ்ந்துவிடும். கற்பில் தலைவனுக்கு இருவகைப் புணர்ச்சிகள் நிகழும்.களவின் வந்த புணர்ச்சியும் களவின் வழி அல்லாமல் திருமணம் செய்துக்கூடும்புணர்ச்சியும் ஆகும். மேலே குறிப்பிட்ட இரு வகைப் புணர்ச்சிக்கும் காதல் பரத்தை, காமக்கிழத்தி, இர்ண்டாம் திருமணம் செய்து கொண்ட குல மகளிர் ஆகிய மூவரும் அடங்குவர். காதல் பரத்தை ம...

அகத்திணைப் பாடல்கள்வழி அன்றைய வாழ்வியல் கூறுகள்

முன்னுரை :  'தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவனுக்கொரு குணமுண்டு' என்று கூறும் நாமக்கல் கவிஞர் வரிகளில் உள்ள உண்மைத் தன்மை அகிலத்தோரால் போற்றப்படுகிறது. இதனையே தமிழ் இலக்கியங்களும் கூறுகிறது. சிற்பம், கட்டிடக்கலை, போர், இசை, கனிமவளம், மருத்துவம் என அனைத்திற்கும் முன்னோடியாகத் திகழ்பவன் தமிழன். அதற்குமட்டுமல்ல பலமணம் செய்து கொண்டு திருமணம் என்று அவ்வுறவைக் கொச்சைப் படுத்தும் மனிதர்களுக்கிடையே ஒருவனுக்கு ஒருத்தி என்னும் உன்னத கோட்பாட்டோடு வாழ்ந்து குடும்ப வாழ்வியலுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறான் அதனையே சங்க இலக்கிய நூல்களும் இயம்புகின்றன. இல்லற வாழ்வியலை அகத்திணை என்று பெயரிட்டு அதற்கென இலக்கணங்களையும் வகுத்துள்ளான். அதைக் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.  அகத்திணை : நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையையே சங்க இலக்கியங்கள் இயம்புகின்றன. பண்டையக் காலத்தில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வியலை தமிழ் இலக்கியங்கள் அகவாழ்வு, புறவாழ்வு என இரண்டு வகையாக வகுத்துள்ளது. இதில் புறவாழ்வு என்பது தலைவன் மேற்கொள்ளும் போர் சிறப்பு பற்றியதாகும். ஆனால் அகவாழ்வு என்பது ஓர் ஆணும் பெண்ணும் கண்களால் காத...