முதலாம் பருவம் முடிவடைந்து, இரண்டாம் பருவமும் முடிவடைந்து விடுமுறைக்காக சொந்த ஊரான தெலுக் இந்தான் செல்லாமல் கோலாலம்பூருக்குச் சென்றேன். என்னுடைய அத்துணை நாளும் மலாயா பல்கலைகழத்திலேயே காலை முதல் மாலை வரம் செலவழித்தேன். கண்டதை கற்றவன் பண்டிதனாவான் என்பார்களே அது போல நிறைய புத்தகங்களை வாசிக்கத் துவங்கினேன்.
அப்போதுதான் இந்தியப் பிரிவுத் தலைவர் ஐயா சபாபதி அவர்களைச் சந்திக்க வாய்ப்பு கிட்டியது. அவருடன் சிலப்பதிகாரம் பற்றிய என்னுடைய சந்தேகங்களைக் கேட்டறிந்து கொண்டேன். அவரும் முகம் சுளிக்காமல் நான் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் மிகத் தெளிவாக பதிலளித்தார். அவருடைய அறைக்கு நுழையும் போதே தமிழ் மணத்தோடு தெய்வீக வாசனையும் வீசிற்று. எனக்கு அந்த இடத்தை விட்டு வெளியேற மனமில்லாமல் வெளியேறினேன். அவரும் என் கைகளில் சில பேரவைக் கதை புத்தகத்தை என்னிடம் கொடுத்து "நிறையா வாசியுங்கள், நீங்களும் ஒரு நாள் எழுதலாம்" என்று விடையனுப்பினார்.
கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி என்பது போல என் தமிழாசிரியரைச் சந்தித்தேன். அவரிடம் சிறுகதை எழுதுவது எப்படி வினா எழுப்பியவுடன் என்னைக் கிண்டலடித்தவாறு அடுத்த வாரம் ஐயா ரே. கார்த்திகேசு அவர்கள வருகிறார் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள் என்றார். வேண்டும் என்றால் உன் வீட்டிற்கு அழைத்து வருகிறேன் என்றார். நானும் வெகு ஆர்வத்துடன் காத்திருந்தேன். வந்தார் என் ஆசிரியர் கையில் ஐயா ரே.கார்திகேசு எழுதிய சிறுகதை தொகுப்பு. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
Dr V Sabapathy (Malaysia) Associate Professor, Department of Indian Studies University of Malaysia |
அவரின் ஆசிர்வாதத்துடன் நானும் தெலுக் இந்தான் வந்தடைந்தேன். எனக்குள் சில குழப்பங்கள் எழுத்தாளனாவது அவ்வளவு கடினாமா?? ஏன் என்னால் கதையை சுவாரசியமாக எழுத முடியவில்லை. நானும் எத்தனையோ புத்தகங்களை வாசித்து விட்டேன். இருப்பினும் என் கதையின் நடை ஏன் மற்றவர்களை ஈர்க்கவில்லை என்ற பல குழப்பங்கள் என் மனதிற்குள்.
எத்தனையோ முறை சிந்தித்தேன் எழுதவும் நினைத்தேன் எழுத மனம் இடமளிக்கவில்லை.
எனக்கும் சிறுகதை எழுதவேண்டும் என்று நெடுநாளாக ஆசை ஆழ்மனதில் உருத்திக்கொண்டிருந்தது. எனக்குள் சில கேள்விகளும் தோன்றின, இது எதுவுமே என் மனதில் புலப்படவில்லை.
- எப்படி தொடங்குவது?
- எப்படி தொடர்வது?
- எப்படி முடிப்பது?
பேராசியர் முனைவர் ரேங்கசாமி கார்திகேசு Professor of Mass Communication, மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் University Science Malaysia; (பணி ஓய்வு) |
”தனேஷ் உன்னோடு ஆர்வம் எனக்கு புரிகிறது. ஒன்றை மட்டும் புரிந்து கொள் சிறுகதை எழுதுவதை பாடமாக எல்லாம் சொல்லித்தர முடியாது. ஆனால் ஒரு வாசகன் நிறைய சிறுகதைகள் வாசிப்பதின் மூலமாக சிறுகதைகளை எழுதும் ஆற்றலை பெற்றிட முடியும். குறிப்பாக ரே.கார்த்திகேசுவின் சிறுகதைகளையும் சுஜாதா எழுதிய சிறுகதையும் நிறைய வாசி” எனக் கூறி அவர் கையில் இருந்த புத்தகத்தை என் கையில் திணித்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக